இந்திய வானிலை ஆய்வு மையம் சற்றுமுன் வெளியிட்ட அறிக்கையில் இன்று இரவு 7 மணி வரை, 17 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது
நீலகிரி, கோவை, ஈரோடு, திண்டுக்கல், தேனி, தென்காசி, மதுரை, விருதுநகர், கடலூர், கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர், திருச்சிராப்பள்ளி, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், புதுக்கோட்டை ஆகிய 17 மாவட்டங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது.
தாழ்வான பகுதிகளில் நீர் தேக்கம் ஏற்பட வாய்ப்புள்ளது என்றும், சில பகுதிகளில் சாலைகள் வழுக்கும் தன்மை கொண்டதாக மாறி, போக்குவரத்து பாதிக்கப்படலாம் என்றும், எனவே, பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கவனத்துடன் இருக்குமாறு வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.