Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

’வணக்கம் சோழ மண்டலம்’.. சிவனை வழிபடுபவன் சிவனில் கரைகிறான்! - பிரதமர் மோடி பேச்சு!

Advertiesment
PM Modi in gangaikonda chozhapuram

Prasanth K

, ஞாயிறு, 27 ஜூலை 2025 (15:21 IST)

ஆடித்திருவாதிரை விழாவிற்காக கங்கை கொண்ட சோழபுரம் வருகை தந்துள்ள பிரதமர் மோடி ‘வணக்கம் சோழமண்டலம்’ என்று கூறி தனது உரையைத் தொடங்கியுள்ளார்.

 

கங்கைக்கொண்ட சோழபுரத்தில் நடைபெறும் ஆடித்திருவாதிரை விழாவில் கலந்துக் கொண்டார் பிரதமர் மோடி. கங்கையில் இருந்து கொண்டு வந்த நீரால் பெருவுடையாருக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. பெருவுடையாரை வழிபட்ட பிரதமர் மோடி, ராஜேந்திர சோழனின் நினைவு நாண்யத்தை வெளியிட்டார். பின்னர் இசைஞானி இளையராஜாவின் கச்சேரியை கேட்டு ரசித்தார்.

 

பின்னர் உரையாற்றிய அவர் “வணக்கம் சோழ மண்டலம். நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க என்ற வாசகத்தை கூறி உரையைத் தொடங்குகிறேன். சிவபக்தி பாடல்களை கேட்டபோது எனக்குள்ளே பரவசமாக இருந்தது. இந்த ஆன்மிக அனுபவம் என் ஆன்மாவை ஆனந்த வெள்ளத்தில் ஆழ்த்தியது.

 

பெருவுடையாரை வழிபடும் வாய்ப்பு எனக்கு கிடைத்துள்ளது. இங்கு ஏற்பாடு செய்யப்பட்ட கண்காட்சி என்னை பெருமிதமாக உணர வைத்தது. சிவனை வழிபாடு செய்பவன் சிவபெருமானோடு கரைந்து விடுகிறான் என சாஸ்திரங்கள் கூறுகின்றன. சிவனை வழிபடுபவன் அவரை போலவே ஆகிவிடுகின்றான் என கூறப்படுகிறது. 140 கோடி மக்களின் நலனுக்காகவும், நாட்டின் நிரந்தர வளர்ச்சிக்காகவும் பிரார்த்தனை செய்தேன்.” என்று கூறியுள்ளார்.

 

Edit by Prasanth.K


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஓலைச்சுவடி படிக்கும் தஞ்சை மணிமாறன்! - மன் கீ பாத்தில் புகழ்ந்து வாழ்த்திய பிரதமர் மோடி!