Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கரூர் to சிபிஐ!.. அமைதியாக விஜய்!.. குழப்பத்தில் நிர்வாகிகள்!.. தவெகவில் நடப்பது என்ன?....

Advertiesment
vijay

BALA

, வெள்ளி, 23 ஜனவரி 2026 (12:03 IST)
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்கிற அரசியல் கட்சியை துவங்கி அரசியல் களத்திலும் செயல்பட்டு வருகிறார். ஆனால் அதேநேரம் அவர் பல விமர்சனங்களையும் சந்தித்து வருகிறார். குறிப்பாக விஜய் செய்வது அரசியலே இல்லை.. அரசியல் அற்ற ஒரு அரசியலை அவர் செய்து வருகிறார்.. பெரும்பாலான பிரச்சனைகளுக்கு அமைதியாக இருக்கிறார்.. எதற்கும் அவர் வாய் திறப்பதில்லை என்கிற விமர்சனம் அவர் மீது இருக்கிறது.

பொதுக்கூட்டங்களில் பேசும் போது திமுகவை மட்டுமே தொடர்ந்து விமர்சித்து வருகிறார்... அதிமுக, பாஜக பற்றி அவர் அதிகம் பேசுவதில்லை. இதைக்கேட்டால் ‘இங்கே களத்தில் யார் இருக்கிறார்களோ அவர்களைதான் பேசுவோம்’ என்கிறார் விஜய். அதேபோல் கரூர் சம்பவம் நடந்த போதும் அது பற்றி ஒரு தீவிர தெளிவான விளக்கத்தை விஜய் கொடுக்கவில்லை.. தமிழ்நாட்டில் செய்தியாளர்களையே சந்திக்காக ஒரே அரசியல்வாதி விஜய் மட்டுமே. திருப்பரங்குன்றம் விவகாரத்தில் கருத்து சொல்லவில்லை. ஜனநாயகன் படம் பிரச்சனை பற்றியும் பேசவில்லை. தற்போது சிபிஐ விசாரணையிலும் சிக்கியிருக்கிறார். அதற்கும் அவர் கருத்தும் தெரிவிக்கவில்லை.

உண்மையில் இந்த எல்லா வாய்ப்புகளையும் விஜய் தனது அரசியலுக்காக பயன்படுத்தி ஸ்கோர் செய்திருக்க முடியும். ஆனால் அதையெல்லாம் கோட்டை விட்டுவிட்டுவிட்டார். ஒரு சினிமாவை பார்த்து பாஜக பயப்படுகிறது என விஜய் சொல்லியிருந்தால் பற்றிக் கொண்டிருக்கும். ஆனால் விஜய் அதை செய்யவில்லை.. விஜய் இப்படி இருப்பது தவெக நிர்வாகிகளுக்கே பிடிக்கவில்லை. கரூர் சம்பவத்திற்கு பின் செங்கோட்டையன் தலைமையில் முக்கிய நிர்வாகிகள் மற்றும் மாவட்ட செயலாளர்களை உறுப்பினராக வைத்து தனக்கு சரியான வியூகங்களை அமைத்துக் கொடுக்கும் ஒரு குழுவை உருவாக்கினார் விஜய்.

ஆனால் அப்படி குழு அமைத்தும் கடந்த மூன்று மாதங்களில் சில முறை மட்டுமே ஆலோசனைக் கூட்டம் நடந்திருக்கிறது. குழு அமைத்த பிறகும் எல்லா முடிவுகளையும் வியூக வகுப்பாளர்  ஜான் ஆரோக்கியசாமி எடுக்கிறார் என பொங்குகிறார்கள் தவெக நிர்வாகிகள். தேர்ந்தல் நெருங்கும் நிலையிலும் விஜய் அமைதியாக இருந்தால் தவெகவில் இன்னும் குழப்பமே நீடிக்கும்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

5 கொலை செய்த காதலர்.. 1 கொலை செய்த காதலி.. பரோல் பெற்று இன்று திருமணம்.. பொதுமக்கள் அதிர்ச்சி..!