Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தவெகவின் செயற்குழு கூட்டம் நடைபெறும் தேதி அறிவிப்பு.. தொண்டர்கள் உற்சாகம்..!

Siva
வெள்ளி, 27 ஜூன் 2025 (09:08 IST)
தவெகவின் செயற்குழு கூட்டம் வரும் ஜூலை 4ம் தேதி அக்கட்சி தலைவர் விஜய் தலைமையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வெளியான அறிக்கையில் கூறியிருப்பதாவது: 
 
தமிழக வெற்றிக் கழகத்தின் மாநிலச் செயற்குழுக் கூட்டம், கழகத் தலைவர் திரு. விஜய் அவர்கள் தலைமையில், வருகிற 04.07.2025 வெள்ளிக்கிழமை அன்று காலை 10.00 மணிக்கு, சென்னை. பனையூரில் உள்ள கழகத்தின் தலைமை நிலையச் செயலகத்தில் நடைபெற உள்ளது.
 
இக்கூட்டத்தில், கழகத்தின் சார்பாக அடுத்தடுத்து மேற்கொள்ளப்பட வேண்டிய ஆக்கப்பூர்வ நடவடிக்கைகள் குறித்தும், நம் வெற்றித் தலைவர் அவர்களின் நிகழ்வுகள் மற்றும் தொடர் மக்கள் சந்திப்புகள் குறித்த திட்டமிடல்கள் மற்றும் ஆலோசனைகள் குறித்தும் கலந்துரையாடப்பட உள்ளது. 
 
எனவே, கழக சட்ட விதிகளின்படி, மாநிலச் செயற்குழு உறுப்பினர்களான - தலைமைக் கழக நிர்வாகிகள். தலைமைக் கழகச் சிறப்புக் குழு உறுப்பினர்கள், கழகத்தின் மாநில நிர்வாகிகள் / கழக மாவட்டங்களை உள்ளடக்கிய மண்டலப் பொறுப்புச் செயலாளர்கள், கழக மாவட்டச் செயலாளர்கள் மற்றும் சார்பு அணிகளின் மாநில ஒருங்கிணைப்பாளர்கள் மட்டும் பங்கேற்கும்படி, கழகத் தலைவர் அவர்களின் ஒப்புதலுடன் கேட்டுக்கொள்கிறேன்.
 
இவ்வாறு தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

6 ஆண்டுகளாக ஒரு தேர்தலில் கூட போட்டியிடாத 345 அரசியல் கட்சிகள்.. தேர்தல் ஆணையம் அதிரடி நடவடிக்கை..!

இன்று 5 மாவட்டங்களில் கனமழை.. 2 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை.. வானிலை ஆய்வு மையம்..!

பாகிஸ்தான் எத்தனை கடிதம் எழுதினாலும் சிந்துநதிநீர் தரமாட்டோம்: இந்தியா உறுதி..!

2 மகள்களை 5 ஆண்டுகளாக பாலியல் பலாத்காரம் செய்த தந்தை.. புகார் அளிக்காத தாய்.. போலீஸ் செய்த தந்திரம்..!

பார்ட்டிக்கு சென்ற இளம்பெண்.. 13வது மாடியில் இருந்து கீழே விழுந்து பலி? கொலையா? விபத்தா?

அடுத்த கட்டுரையில்