Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

காந்தாரா மாதிரி PAN இந்தியா படம் பண்ணப் போறேன் –விஜய் ஆண்டனி கொடுத்த அப்டேட்!

Advertiesment
Kagana Margan

vinoth

, வியாழன், 26 ஜூன் 2025 (08:37 IST)
தமிழ் சினிமாவில் சுக்ரன் படம் மூலமாக இசையமைப்பாளராக அறிமுகமானவர் விஜய் ஆண்டனி. அதன் பின்னர் அவர் வரிசையாகப் பல ஹிட் படங்களுக்கு இசையமைத்து முன்னணி இசையமைப்பாளராக வலம்வந்தார். இதற்கிடையில் அவர் திடீரென ‘நான்’ படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். அந்த படம் ஹிட்டானதை தொடர்ந்து அவர் தொடர்ந்து நடிகராக கவனம் செலுத்த ஆரம்பித்தார்.

தற்போது தன் படங்களுக்கேக் கூட இசையமைப்பதை அவர் குறைத்துக் கொண்டுள்ளார். இந்நிலையில் படத் தொகுப்பாளர் லியோ ஜான் பால் இயக்கத்தில் அவர் நடித்துள்ள ‘மார்கன்’ திரைப்படம் நாளை ரிலீஸாகவுள்ளது. இதற்கான ப்ரமோஷன் பணிகளில் ஈடுபட்டு வரும் விஜய் ஆண்டனி ‘காந்தாரா’ போன்ற கதைக்களத்தில் ஒரு படத்தை எடுக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

அதில் “காந்தாரா போல ஒரு கிராமத்துக் கதையை மிக பிரம்மாண்டமாக பான் இந்தியா படமாக எடுக்கவுள்ளேன். அதற்கான வேலைகள் தொடங்கி விட்டது. இன்னும் டைட்டில் வைக்கவில்லை. விரைவில் ஷூட்டிங் தொடங்கும். அதிகாரப்பூர்வ அறிவிப்பை விரைவில் வெளியிடுவேன்” எனக் கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

என் தயாரிப்பாளர்கள் சிரமங்களை எதிர்கொள்கிறார்கள்- இயக்குனர் ராம் வருத்தம்!