Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

முதல்வர் ஸ்டாலினை எதிர்த்து கொளத்தூரில் விஜய் போட்டியா? தேர்தல் ஆய்வாளர் வம்சி பேட்டி..!

Advertiesment
மு.க. ஸ்டாலின்

Siva

, புதன், 25 ஜூன் 2025 (17:09 IST)
தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தொடர்ந்து கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றுவரும் நிலையில், 2026 ஆம் ஆண்டு தேர்தலிலும் அதே தொகுதியில் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், இந்த தொகுதியில் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் போட்டியிடுவார் என்று ஒரு வதந்தி கிளம்பி கொண்டிருக்கும் நிலையில், இது குறித்து தேர்தல் ஆய்வாளர் வம்சி கருத்து கூறியுள்ளார்.
 
பொதுவாக, ஒரு கட்சியின் தலைவர் முதல்முறையாக களத்தில் இறங்கும் தேர்தலில், முதல்வரை எதிர்த்து போட்டியிட்டால் வெற்றி பெறுவது கடினம். ஏனெனில், அந்த தொகுதிக்கு மட்டுமே அவர் முழு கவனத்தையும் செலுத்த வேண்டி இருக்கும். மற்ற தொகுதிகளில் கவனம் செலுத்த முடியாது.
 
கடந்த 2021 ஆம் ஆண்டு தேர்தலில், கோவையில் கமல்ஹாசன் போட்டியிட்டதால், அவர் தனது தொகுதிக்கு முழு கவனத்தை செலுத்தி, அதனால் மற்ற தொகுதிகளை கோட்டைவிட்டார். அதே தவறை விஜய் செய்ய மாட்டார். எனவே, முதல்வரை எதிர்த்து கொளத்தூரில் விஜய் போட்டியிட வாய்ப்பே இல்லை என்று வம்சி தெரிவித்தார்.
 
சீமானுக்கும் இதே போன்ற ஒரு எண்ணம் இருந்தாலும், அவரும் மற்ற தொகுதிகளில் பிரச்சாரம் செய்ய வேண்டும் என்பதால், முதல்வரை எதிர்த்து போட்டியிட வாய்ப்பு இல்லை என்றும் வம்சி கூறினார். எனவே, முதல்வர் ஸ்டாலின் தொகுதியில் விஜய் அல்லது சீமான் போட்டியிட மாட்டார்கள் என்றுதான் கருத்துக்கள் கூறப்பட்டு வருகின்றன.
 
Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஆந்திராவில் கணவனை கொலை செய்த மனைவி வழக்கில் திடுக்கிடும் தகவல்.. 8 பேர் கைது.