Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தாமதமாகும் காவல்துறை அனுமதி.. தள்ளி போகிறதா தவெக மாநாடு? இன்று முக்கிய அறிவிப்பு..!

Siva
வியாழன், 12 செப்டம்பர் 2024 (07:30 IST)
விஜய்யின் தமிழக வெற்றிக்கழகம் நடத்தும் முதல் மாநாட்டிற்கு காவல்துறை அனுமதி இன்னும் கிடைக்கவில்லை என்பதால் புதிய தேதி இன்று அறிவிக்கப்படும் என செய்திகள் வெளியாகியுள்ளன.

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நடிகர் விஜய் தமிழக வெற்றி கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கிய நிலையில் இந்த கட்சியின் மாநாடு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே செப்டம்பர் 23ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த மாநாட்டிற்காக காவல்துறையை அனுமதிக்கு விண்ணப்பம் செய்திருந்த நிலையில் காவல்துறையினர் மாநாடு நடக்கும் இடத்தை ஆய்வு செய்து சில கேள்விகளை கேட்டதாகவும் அதற்கு தமிழக வெற்றி கழகத்தின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் பதில் அளித்ததாகவும் செய்திகள் வெளியானது.

இருப்பினும் மாநாட்டிற்கான அனுமதியை இன்னும் காவல்துறையை வழங்கவில்லை என்று கூறப்படும் நிலையில் மாநாடு தேதி நெருங்கி விட்டதால் இனி அனுமதி கொடுத்தாலும் மாநாட்டிற்கான ஏற்பாடு செய்வது கடினம் என்பதால் மாநாடு நடைபெறும் புதிய தேதி குறித்த அறிவிப்பு இன்று காலை 11 மணிக்கு வெளியாகிறது  என்றும், இந்த அறிவிப்பை தவெக தலைவர் விஜய் வெளியிடுவார் என்றும் கூறப்படுகிறது.

Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் உடல்நிலையில் பின்னடைவு: மருத்துவமனை வட்டாரத்தில் தகவல்

சதுரகிரியில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளம்.. பக்தர்களுக்கு தடை விதித்ததால் அசம்பாவிதம் தவிர்ப்பு..!

பூண்டி ஏரியில் இருந்து 16,500 கன அடி உபரி நீர்.. வெள்ளத்தில் சிக்கிய பால் வியாபாரி.. சென்னையில் பரபரப்பு..!

நீதிபதிகள் துறவி போல் வாழ வேண்டும், சமூக ஊடகத்தில் கருத்து சொல்ல கூடாது: சுப்ரீம் கோர்ட்

ஒரே நாளில் 1200 புள்ளிகள் சரிந்து 843 புள்ளிகள் உயர்ந்தது சென்செக்ஸ்.. முதலீட்டாளர்கள் ஆச்சரியம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments