Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அடுத்தடுத்து நான்கு அறுவை சிகிச்சைகள்.. என்ன ஆச்சு விஜய் டிவி டிடிக்கு?

Advertiesment
அடுத்தடுத்து நான்கு அறுவை சிகிச்சைகள்.. என்ன ஆச்சு விஜய் டிவி டிடிக்கு?

Siva

, புதன், 11 செப்டம்பர் 2024 (11:29 IST)
விஜய் டிவி பிரபலம் டிடி என்ற திவ்யதர்ஷினி தனக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு இருப்பதாகவும் கடந்த 10 ஆண்டுகளில் அடுத்தடுத்து நான்கு அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டு விட்டதாகவும் கூறியுள்ளார். இது குறித்து அவர் மேலும் கூறியிருப்பதாவது:

எனது வலது கால் முட்டியில் காயம் ஏற்பட்டதை அடுத்து ஏற்கனவே மூன்று முறை அறுவை சிகிச்சை செய்திருந்தேன். நான்காவது முறையாக இப்போது அறுவை சிகிச்சை செய்து விட்டேன். பத்து ஆண்டுகளில் நான்கு முறை அறுவை சிகிச்சை செய்து விட்ட நிலையில் இதுதான் கடைசியாக இருக்க வேண்டும் என்று பிரார்த்தனை செய்கிறேன்.

கடந்த இரண்டு மாதங்கள் எனக்கு மிகவும் வலி மிகுந்ததாக இருந்தது, உடல் நிலையில் சில முன்னேற்றம் இருந்தாலும் கடினமாக உணர்ந்தேன். இரண்டு மாத சிகிச்சைக்கு பிறகு தற்போது ரசிகர்களுக்கு எனது நிலையை தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

இதுவரை எனக்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி. எனது கடினமான நாட்களில் உங்கள் அன்பு தான் என்னை மீட்டு கொண்டு வந்தது. இதற்கு முன்பு இருந்ததை விட நான் மீண்டும் திடமாக வருவேன்.

எனது மருத்துவர்களுக்கும் மருத்துவமனை ஊழியர்களுக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். மீண்டும் விரைவில் உங்கள் எல்லோரையும் சந்திப்பேன்’ என்று டிடி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதனை அடுத்து ரசிகர்கள் அவர் விரைவில் குணமாக வேண்டும் என்று வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Edited by Siva
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Dhibba????Dance all The Way (@ddneelakandan)

 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

என் ஒப்புதல் இல்லாமல் விவாகரத்து அறிவிப்பு: ஜெயம் ரவி மனைவி ஆர்த்தி..!