எழுந்து நிற்க முடியாத நோயால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளி குழந்தை விஜய்யை பார்த்ததும் எழுந்து நின்று அவரை கட்டிப்பிடித்த சம்பவம் மெடிக்கல் மிராக்களை ஏற்படுத்தி இருப்பதாக கூறப்படுகிறது.
கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த சிறப்பு குழந்தை பெருமுனை வாதம் என்ற நோயால் பாதிக்கப்பட்ட நிலையில் நடிகர் விஜய்யின் தீவிர ரசிகராக இருந்துள்ளார். பெருமுனை வாதம் நோயால் நடப்பதில் சிரமம் இருக்கும் இவர் விஜய் பாடலை கேட்டால் எழுந்து நின்று ஆட முயற்சி பார் என்றும் அப்போது அவர் பலமுறை கீழே விழுந்து காயம் அடைந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் கோட் படத்தின் படப்பிடிப்பின் போது நடிகர் விஜய்யை நேரில் பார்த்த அவர் உணர்ச்சிவசப்பட்டு விஜய்யை எழுந்து கட்டிப்பிடித்து விட்டார். இந்த வீடியோ இணையத்தில் வைரலானது இந்த சம்பவத்திற்கு பிறகு இந்த குழந்தையின் நடவடிக்கைகளில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் மீண்டும் விஜய்யை பார்க்க வைத்தால் இன்னும் முன்னேற்றம் ஏற்படும் என்று முடிவு செய்து விஜய்யின் நீலாங்கரை வீட்டிற்கு குழந்தையுடன் அவரது பெற்றோர் வந்தனர். ஆனால் விஜய்யை மீண்டும் அவர்களால் சந்திக்க முடியவில்லை என்று கூறப்படுகிறது