Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பிவிஆர் ஐநாக்ஸ் வெளியிடும் விஜய் சத்யா நடிக்கும் "தில்ராஜா"

Advertiesment
பிவிஆர் ஐநாக்ஸ்  வெளியிடும் விஜய் சத்யா நடிக்கும்

J.Durai

, புதன், 11 செப்டம்பர் 2024 (12:10 IST)
கோல்டன் ஈகிள் ஸ்டுடியோஸ் என்ற பட நிறுவனம் சார்பில் கோவை பாலா  தயாரித்திருக்கும் படத்திற்கு
 "தில் ராஜா"என்று பெயரிட்டுள்ளார்.
 
சாக்லேட், பகவதி, ஏய், வாத்தியார், மாஞ்சா வேலு, மலை மலை, கில்லாடி போன்ற வெற்றிப்  படங்களை இயக்கிய A.வெங்கடேஷ் இந்த படத்தை இயக்கியிருக்கிறார்.
 
விஜய் சத்யா  கதாநாயகனாக நடிக்கிறார். இந்த படத்திற்காக நாயகன்  விஜய் சத்யா சிக்ஸ் பேக்  உடற்கட்டை உருவாக்கி நடித்திருக்கிறார்.
 
கதாநாயகியாக ஷெரின் நடித்துள்ளார். மற்றும் வனிதா விஜயகுமார், இமான் அண்ணாச்சி, சம்யுக்தா, கராத்தே ராஜா, விஜய் டிவி பாலா, ஞானசம்பந்தம், அம்மு, லொள்ளு சபா மனோகர்,  வெனீஸ், ரங்கநாதன், மூக்குத்தி முருகன், தணிகைவேல் ஆகியோர் நடித்துள்ளனர்.
 
இந்த படத்திற்கு அம்ரீஷ் இசையமைத்துள்ளார். பாடல்களை  நெல்லை ஜெயந்தன், கலைகுமார் இருவரும் எழுதியுள்ளனர்.
 
திரைக்கதை எழுதி இயக்கியிருக்கிறார் A.வெங்கடேஷ்.
 
படத்தின் இறுதிக்கட்ட பணிகள் அனைத்தும் முடிவுற்று வெயியீட்டிற்கு தயாராக உள்ளது.
 
திரில்லர், ஆக்க்ஷன் கலந்த ஒரு வித்தியாசமான  படமாக இதை உருவாக்கி இருக்கிறார்கள். நாயகன் விஜய் சத்யா படத்தில் தீவிர ரஜினி ரசிகராக நடித்துள்ளார். அவரோடு இணைந்து நாய் ஒன்றும் முக்கிய கதாபாதிரத்தில் நடித்துள்ளது.
 
அனைவரும் குடும்பத்துடன் அமர்ந்து பார்க்கும்படியான செண்டிமென்ட் கலந்து ஜனரஞ்ஜகமாக உருவாகி இருக்கிறது.
 
அம்ரீஷ் இசையில்,  கலைக்குமார் பாடல் வரிகளில், ஆண்டனிதாசன் குரலில் உருவாகியுள்ள இந்த படத்தில் இடம் பெறும் "சாமி குத்து"  பாடல் வெளியாகி சுமார் ஒரு கோடிக்கும் அதிகமான ரசிகர்கள் கண்டுகளித்துள்ளனர்.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மீண்டும் இயக்குனர் ஆகும் தனுஷ்.. சொந்த ஊரில் நடக்கும் ஷூட்டிங்!