Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மீன்பிடி படகுகளில் தவெக கட்சிக் கொடி! மானியத்தை நிறுத்திய அதிகாரிகள்..? - என்ன நடந்தது?

Advertiesment
TVK boats

Prasanth K

, வெள்ளி, 11 ஜூலை 2025 (09:57 IST)

மீன்பிடி படகுகளில் தமிழக வெற்றிக் கழகத்தின் வண்ணம் பூசியதற்காக மானியம் மறுக்கப்பட்டதாக மீனவர்கள் குற்றம் சாட்டியுள்ளது திருநெல்வேலியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளம் அருகே உள்ள கூட்டப்புளி கிராமத்தை சேர்ந்த மீனவர்கள் சிலர் தங்கள் படகுகளில் தவெக கட்சி வண்ணம் மற்றும் கொடியை பயன்படுத்தியதாக கூறப்படுகிறது. அதை தொடர்ந்து அவர்களுக்கு நடப்பு மாதத்திற்கு வழங்க வேண்டிய 250 லிட்டர் மண்ணெண்ணெய் மானியத்தை அரசு அதிகாரிகள் தரவில்லை என புகார்கள் எழுந்துள்ளது. 

 

இந்த சம்பவத்தால் மீன்வளத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்ட மீனவர்களும், தவெக கட்சியினரும் 10க்கும் மேற்பட்ட கடற்கரை பகுதிகளை சேர்ந்த மீனவர்கள் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து நேற்று தவெக தலைவர் விஜய்யும் கண்டனம் தெரிவித்து பதிவிட்டிருந்தார்.

 

இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து விளக்கம் அளித்துள்ள மீன்வளத்துறை அதிகாரிகள் “ அரசு விதிமுறைகளின்படி நாட்டு மீன்பிடி படகுகளில் நீல வண்ணம் மட்டும்தான் பூச வேண்டும். வேறு கட்சியின் வண்ணம், பெயர் இடம் பெறக் கூடாது. ஆனால் அந்த படகுகளில் தவெக கொடி, வண்ணம் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது விதிமுறைகளுக்கு எதிரானது. 

 

அவர்களுக்கான மானியங்கள் எதுவும் நிறுத்தப்படவில்லை. மேலும் இதுகுறித்து வாய்மொழி எச்சரிக்கையும் விடப்பட்டுள்ளது. தொடர்ந்து அவர்கள் படகு வண்ணத்தை மாற்றாமல் இருந்தால் அரசின் சலுகைகளை பெற முடியாது” என கூறியுள்ளனர்.

 

இந்நிலையில் சமூக வலைதளங்களில் தவெக ஆதரவு மீனவர்கள் கடலில் தவெக கொடி மற்றும் வண்ணம் பூசிய படகுடன் கூட்டமாக பயணித்து வெளியிட்டுள்ள வீடியோவும் வைரலாகி வருகிறது.

 

Edit by Prasanth.K


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தம்! இந்தியாவை வலுப்படுத்தும் வகையில் திட்டங்கள்! - அமெரிக்கா செல்லும் இந்திய குழு!