தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தில் அப்போதைய மாவட்ட கலெக்டர் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்க விசாரணை செய்த ஆணையம் அறிக்கை தாக்கல் செய்துள்ளது
இதுகுறித்து விசாரணை செய்த அருணா ஜெகதீசன் தலைமையிலான குழு அறிக்கை இன்று சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அந்த அறிக்கையில் துப்பாக்கி சூடு நடத்துவதற்கு முன்பு போராட்டக்காரர்களை எச்சரிக்கவில்லை என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது
மேலும் அப்போதைய தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் மற்றும் மூன்று வருவாய்த்துறை அலுவலர்கள் மீது துறைரீதியிலான நடவடிக்கை எடுக்க அந்த ஆணையம் பரிந்துரை செய்துள்ளது
மேலும் துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக உயிரிழந்தவர்களின் உறவினர்களுக்கு ரூ. 50 லட்சம் இழப்பீடு தொகை வழங்க வேண்டும் என்றும் அந்த ஆணையம் பரிந்துரை செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.