தமிழ் வழியில் படித்தவர்களுக்கான சான்றிதழ் ஆன்லைனில் மட்டுமே வழங்கப்படும் என பள்ளிக்கல்வித் துறை தெரிவித்துள்ளது.
டிஎன்பிஎஸ்சி உள்ளிட்ட தேர்வுகளிலும் அரசு பணிகளுக்கும், மருத்துவ படிப்புகளை படிக்கும் மாணவர்களுக்கும் தமிழ் வழி கல்வி பயின்றவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது
இதனை அடுத்து தமிழ் வழியில் படித்த மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளி கல்லூரிகளுக்கு நேரடியாக சென்று தலைமை ஆசிரியரிடம் விண்ணப்பித்து சான்றிதழை பெற்று வந்த நிலையில் சமீபத்தில் தமிழ் வழியில் படித்ததற்கானச் சான்றிதழ் ஆன்லைனில் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது
இதனை அடுத்து தலைமையாசிரியர் வழியிலும் ஆன்லைனிலும் வாங்கலாம் என்று கூறப்பட்டிருந்த நிலையில் தற்போது ஆன்லைனில் மட்டுமே இனி தமிழ் வழி படித்ததற்கானச் சான்றிதழ் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது