Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தூத்துக்குடி ஆணவக்கொலை: 2 பேர் நீதிமன்றத்தில் சரண்

Advertiesment
tuticorn
, சனி, 4 நவம்பர் 2023 (13:46 IST)
தூத்துக்குடியில் புதுமண தம்பதிகள் கார்த்திகா மற்றும் மாரிச்செல்வம் ஆணவக் கொலை வழக்கில் கருப்புசாமி, பரத் விக்னேஷ் ஆகியோர் வள்ளியூர் நீதிமன்றத்தில் சரண் அடைந்துள்ளனர். இந்த வழக்கில் ஏற்கனவே 4 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது இருவர் சரணடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மணப்பெண் கார்த்திகாவின் தந்தை முத்துராமலிங்கம் நேற்று கைதான நிலையில், இக்கொலை வழக்கில் தொடர்புடைய அனைவரும் கைது செய்யப்பட்டுள்ளனர் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

முன்னதாக தூத்துக்குடி மாவட்டத்தில் மாரிச்செல்வம் மற்றும் கார்த்திகா ஆகிய இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இருவரும் ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர் என்றாலும் மாரிச்செல்வம் பொருளாதாரத்தில் பின்தங்கியவர் என்பதால் கார்த்திகாவின் பெற்றோர் இந்த திருமணத்தை ஒப்புக்கொள்ளவில்லை.

இந்த நிலையில் திடீரென ஐந்து பேர்  மாரிச்செல்வம், கார்த்திகா ஆகிய இருவரையும்  வெட்டிக் கொலை செய்தனர். இந்த நிலையில் இந்த சம்பவம் தூத்துக்குடி மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் கார்த்திகாவின் தந்தை முத்துராமலிங்கம் நேற்று கைது செய்யப்பட்டார்.  மேலும் கார்த்திகாவின் உறவினர்கள் சிலர் தலைமறைவாக இருந்த நிலையில் தற்போது அனைவரும் கைதாகியுள்ளனர்.

Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அபிராமி ராமநாதன் வீட்டில் வரித்துறை அதிகாரிகள் சோதனை.. நகைகள் சிக்கியுள்ளதா?