Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கர்ப்பிணி பசுக்களை விஷம் வைத்து கொன்ற கொடுமை! – மதுரையில் அதிர்ச்சி!

Advertiesment
cows
, புதன், 1 நவம்பர் 2023 (10:53 IST)
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே நல்லுத்தேவன்பட்டியைச் சேர்ந்தவர் பின்னியம்மாள்., விவசாய கூலி தொழிலாளியான இவர் 3 பசுமாடுகளை வைத்து பால் விற்பனை செய்து பிழைப்பு நடத்தி வருகிறார்.


 
இந்நிலையில் தற்போது இவரது 3 பசுமாடுகளும் கர்ப்பமாக இருந்தாக கூறப்படுகிறது, இன்னும் சில தினங்களில் கன்றுகளை ஈன்றெடுக்கும் நிலையில் இருந்த இந்த பசுமாடுகளை நேற்று வழக்கம் போல தனது தோட்டத்து பகுதியில் மேய்ச்சலுக்காக அழைத்து சென்றுவிட்டு இரவு பசுமாடுகளுக்கு நீர் வைத்துவிட்டு உறங்கியதாக கூறப்படுகிறது.

காலையில் எழுந்து பார்த்த போது அவரது 3 பசுமாடுகளும்,ஒரு ஆட்டுக் குட்டியும் இறந்து கிடந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்த பின்னியம்மாள் போலிசாருக்கு தகவல் அளித்துள்ளார்.

தகவலறிந்து விரைந்து வந்த உசிலம்பட்டி நகர் காவல் நிலைய போலிசார் மற்றும் கால்நடை மருத்துவர்கள் பசுமாடுகள் அருந்திய குடிநீரில் யூரியா எனும் விஷம் கலந்திருப்பதை கண்டறிந்த நிலையில் விஷம் கலந்த மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

கர்ப்பிணி பசுமாடுகளுக்கு குடிநீரில் விஷம் வைத்து படுகொலை செய்த சம்பவம் உசிலம்பட்டி பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

10 ஆண்டுகளில் 40,000 கி.மீ.. சைக்கிளில் உலகை சுற்றி வரும், 61 வயது அமெரிக்கர்