Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கொலை செய்யப்பட்ட காதல் தம்பதியின் உடல்கள் தகனம்

Advertiesment
tuticorn
, வெள்ளி, 3 நவம்பர் 2023 (17:21 IST)
தூத்துக்குடியில்  வெட்டிக் கொல்லப்பட்ட  காதல் தம்பதியின் உடல்கள் இன்று தகனம் செய்யப்பட்டது

தூத்துக்குடி மாவட்டத்தில் முருகேசன் நகரில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு காதல் திருமணம் செய்த மாரிச் செல்வம்(24), கார்த்திகா (20) இருவரும்   நேற்று  வெட்டிக் கொலை செய்யப்பட்டனர்.

காதல் திருமணம் செய்துகொண்ட இருவரும்  ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர் என்றாலும், மாரிச் செல்வம் பொருளாதாரத்தில் பின்தங்கியவர் என்பதால், கார்த்திகாவின் தந்தை உள்ளிட்ட 6 பேர்   இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்டதாக தகவல் வெளியானது.

இதையடுத்து  கார்த்திகாவின் தந்தை முத்துராமலிங்கம் கைது செய்யப்பட்டார். அவரது உறவினர்கள் 6 பேரை தனிப்படை போலீஸார் தேடி வருகின்றனர்.

இன்று காதல் தம்பதியின்  உடல்கள் போலீஸ் பாதுகாப்புடன் ஒரே இடத்தில் இரு வீட்டாரின் முன்னிலையில் மின் மயானத்தில்  தகனம் செய்யப்பட்டது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இந்தியாவின் AI மையமாக சென்னை விரைவில் உருவெடுக்கும்: யூனிஃபோர் நிறுவன சி.இ.ஓ. உமேஷ்