Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குடிதண்ணீரில் இருந்த எலிமருந்து பாக்கெட்.. 13 வயது தூத்துகுடி சிறுவன் பரிதாப பலி:

Siva
திங்கள், 22 ஜனவரி 2024 (14:19 IST)
தூத்துக்குடியில் எலிமருந்து பாக்கெட் குடிதண்ணீர் பாத்திரத்தில் இருந்த நிலையில் அந்த தண்ணீரை குறித்த 13 வயது சிறுவன் பரிதாபமாக பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.  
 
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே  ராஜன் என்பவருக்கு மூன்று மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர். இவர்களில் இரண்டாவது மகன் விக்னேஷ் நேற்று விளையாடிவிட்டு வீட்டுக்கு வந்து, தாகமாக இருந்ததால் தண்ணீர் குடித்தார். 
 
அந்த தண்ணீர் உள்ள பாத்திரத்தில் எலி மருந்து இருந்ததை பார்த்த அந்த சிறுவன் அந்த பாக்கெட்டை தூக்கி எறிந்து விட்டு தண்ணீரை குடித்ததாக தெரிகிறது. இதனை அடுத்து அந்த சிறுவனுக்கு சில நிமிடங்களில் வாந்தி மயக்கம் வந்த நிலையில் உடனடியாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிகிச்சையின் பலன் இன்றி பரிதாபமாக உயிரிழந்தார் 
 
இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். எலிமருந்து பாக்கெட் இருந்த தண்ணீரை கொடுத்த சிறுவன் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெயரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

புதிய ஜிஎஸ்டி வரி மாற்றம்: உச்சத்திற்கு சென்ற மதுபானம், சிகரெட் விலை..!

சபரிமலையில் தமிழகத்திற்கு 5 ஏக்கர்.. பழனியில் கேரளாவுக்கு 5 ஏக்கர் நிலம்.. அமைச்சர் சேகர்பாபு தகவல்..!

ஜெயலலிதாவால் தான் அண்ணா அறிவாலயம் காப்பாற்றப்பட்டது: எடப்பாடி பழனிசாமி

ஜிஎஸ்டி வரி குறைப்பு எதிரொலி: ஒரே நாளில் 50,000 கார்கள் விற்பனை செய்த டாடா, மாருதி, ஹூண்டாய்..!

டிராபிக்கை கட்டுப்படுத்த உதவி செய்யுங்கள்.. விப்ரோ நிறுவனத்திற்கு கர்நாடக முதல்வர் கடிதம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments