Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

எனக்குக் குக்கர்தான் வேணும் – அடம் பிடிக்கும் டி.டி.வி; தரமறுக்கும் ஈ.பி.எஸ் !

எனக்குக் குக்கர்தான் வேணும் – அடம் பிடிக்கும் டி.டி.வி; தரமறுக்கும் ஈ.பி.எஸ் !
, செவ்வாய், 8 ஜனவரி 2019 (12:52 IST)
திருவாரூர் இடைத் தேர்தல் ஜனவரி 28 ஆம் தேதி நடைபெற இருந்த நிலையில், தேர்தலில் போட்டியிட தங்கள் அமமுக வுக்குக் குக்கர் சின்னம் ஒதுக்கக் கோரி தினகரன் சார்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.

அதிமுக இரண்டாக பிரிந்த போது இரட்டை இலை சின்னத்தைக் கைப்பற்றுவதில் அதிமுக வுக்கும் அமமுக வுக்கும் இடையில் அதிகாரப் போட்டி நடைபெற்றது. பா.ஜ.க. வின் ஆதரவைப் பெற்றமையால் சின்னம் அதிமுக வுக்கு வழங்கப்பட்டது. இரட்டை சிலை சின்னத்தைப் பெற முயன்றதாக தினகரன் மீதும் வழக்கு ஒன்றும் நிலுவையில் உள்ளது.

இதற்கடுத்து ஆர் கே நகரில் நடந்த இடைத்தேர்தலில் தினகரன் குக்கர் சின்னத்தில் நின்று அமோகமாக வெற்றி பெற்றார். அதனால் நடப்பதாக இருந்த திருவாரூர் இடைத்தேர்தல் உள்பட  தனக்குக் குக்கர் சின்னமே வழஙக வேண்டுமென உச்சநீதி மன்றத்தில் வழக்கு ஒன்றை தொடுத்தார்.

நேற்று விசாரணைக்கு வந்த இந்த வழக்கில் எடப்பாடி பழனிசாமி தரப்பிலிருந்து ஆஜரான வழக்கறிஞர்கள், தினகரன் தரப்புக்கு குக்கர் சின்னம் வழங்க எதிர்ப்பு தெரிவித்தனர்.அதற்குப் பதிலளித்த தினகரன் தரப்பு ‘நாங்கள் அதிமுக வுக்கு  சம்பந்தமே இல்லாத குக்கர் சின்னத்தை நாங்கள் கேட்கிறோம்.. அதனை அவர்கள்  எதிர்க்க எந்த முகாந்திரமும் இல்லை’ எனப் பதிலளித்தனர்.
webdunia

திருவாரூர் தேர்தல் தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளதால் குக்கர் சின்னத்தை ஒதுக்க கோரிய தினகரன் மனுவை தற்போது விசாரிக்க வேண்டிய அவசியம் இல்லை என எடப்பாடி தரப்பு வாதத்தை முன் வைத்தது. அதற்கு எதிர்வாதமாக ’ 19 தொகுதிகளுக்கு எப்போது வேண்டுமானாலும் தேர்தல் அறிவிக்கபப்ட இருப்பதால் எங்கள் கட்சிக்கு நிரந்தரமாக குக்கர் சின்னததை ஒதுக்க வேண்டும்’ என  டிடிவி தரப்புக் கேட்டுக்கொண்டது.

இந்த வழக்கின் விசாரணையை 17 ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது நீதிமனறம்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ரஜினியின் இரண்டாவது மகளின் இரண்டாவது ’திருமண அழைப்பிதழ்...’