ஜெயலலிதா சமாதியில் அஞ்சலி செலுத்த சென்ற ஜெ தீபா மற்றும் மாதவன் ஆகியோரின் வீடியோக் காட்சிகள் சமூகவலைதளங்களில் பரவி வருகின்றன.
மறைந்த முன்னாள் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின்னர் தமிழக அரசியலில் பல அரசியல் தலைவர்களும் , கட்சிகளும் முளைத்தனர். ரஜினி, கமல் என ஒருப்பக்கம் வலுவான தலைவர்கள் ஒருபுறம் இருந்தாலும், ஜெயலலிதாவின் ரத்த வாரிசு என்ற பெயரில் அவரின் அண்ணன் மகள் ஜெ தீபா மற்றும் அவரது கணவர் மாதவன் ஆகியோர் செய்த அலப்பறைகள் தமிழக அரசியலில் அனைவருக்கும் பொழுதுபோக்காக அமைந்தது.
புதிதாக எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை என்ற அமைப்பைத் துவங்கினார் ஜெ தீபா. அதில் அவருக்கும் அவரது கணவருக்கும் கருத்து மோதல்கள் (?) வர மாதவன் புதிதாக ஒரு கட்சி ஆரம்பித்தார். ஜெ தீபா மற்றும் அவரது டிரைவர் ராஜா ஆகியோர் கூட்டணி அமைத்து மாதவன் மீது திருட்டுப் பழி சுமத்தினர். அதன் பின் ராஜா பேரவையில் ஒதுக்கி வைக்கப்பட்டு மீண்டும் சேர்த்துக் கொள்ளப்பட்டார். இந்த நகைமுரணான நாடகங்கள் தமிழக மக்களுக்கு நல்ல பொழுதுபோக்காக அமைந்தாலும் தீபா இன்னும் லெட்டர்பேடு கட்சிக்காரராகவே உள்ளார்.
தமிழக அரசியலில் எந்த வித அதிர்வையும் ஏற்படுத்த முடியாததால் சிலகாலம் கிணற்றில் போட்டக் கல்லாக தீபாவும் மாதவனும் இருந்தனர். இதற்கிடையே திருவாரூர் தேர்தல் அறிவித்த பின்னாவது கட்சிக்கு உயிர் கொடுப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திடீர் முடிவாக அதிமுக வோடு சேர்ந்து பணியாற்ற உள்ளதாக அறிவித்தார். இதை அடுத்து கட்சிட்யை அதிமுக வோடு இணைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இதற்கிடையில் தீபா மற்றும் மாதவன் இருவரும் மெரினா பீச்சில் உள்ள ஜெயலலிதாவின் சமாதியில் அவருக்கு அஞ்சலி செலுத்த ஜோடியாக சென்றனர். அப்போது மலர்வளையம் செலுத்துவிட்டு சுற்றியிருந்த மக்களைப் பார்த்துக் கொண்டிருந்த மாதவனை கண்பார்வையாலேப் பார்த்து கும்பிடு என மிரட்டும் தோரனையில் சைகைக் காட்டினார். அதை உணர்ந்த மாதவன் பவ்யமாகக் கையெடுத்துக் கும்பிட்டார்.
இந்த வீடியோக் காட்சிகள் இப்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.