Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

டீல் பேசும் எடப்பாடி ; அமைதி காக்கும் சசிகலா : தனி வழியில் செல்லும் தினகரன்

டீல் பேசும் எடப்பாடி ; அமைதி காக்கும் சசிகலா : தனி வழியில் செல்லும் தினகரன்
, வியாழன், 10 மே 2018 (09:41 IST)
தினகரனுடன் மோதல்  மற்றும் சசிகலாவுடன் அதிமுக தரப்பு நடத்தும் டீல் காரணமாக தனி வழியில் செயல்படுவது என டிடிவி தினகரன் முடிவெடுத்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

 
தற்போது திவாகரன் - தினகரன் மோதல் சசிகலா குடும்பத்தினரிடையே பிரிவினியை ஏற்படுத்தியுள்ளது. தினகரன் பற்றி ஏராளமான புகார்களை திவாகரன் வெளிப்படையாக ஊடகங்களுக்கு பேட்டியளித்தார். இந்த விவகாரம் பூதாகரம் ஆகியதும் தினகரன், திவாகரன் இருவருமே சசிகலாவை சந்திக்க விரும்பினார்கள். 
 
ஆனால், அவர்கள் இருவர்கள் மீதும் கடுமையான கோபத்தில் இருந்த சசிகலா யாரையும் சந்திக்க விருப்பம் தெரிவிக்கவில்லை. ஆனால், புகழேந்தியை சந்தித்த சசிகலா, அதிமுக தரப்பில் இருந்து என்னிடம் பேசி வருகிறார்கள். அவர்களுக்கு தினகரனைத்தான் பிடிக்கவில்லை. ஆனால், என்னை ஏற்றுக்கொள்ள தயாராக இருக்கிறார்கள் எனக் கூறியதாக ஏற்கனவே செய்திகள் வெளியானது.
webdunia

 
இந்நிலையில்தான், அடுத்த நாள் தினகரனை சந்தித்தார் சசிகலா. அப்போது ‘எனக்கு எதிராக திவாகரன் பேசி வருகிறார். நீங்கள் அமைதியாக இருக்கிறீர்கள். உங்களை பொதுச்செயலாளராக ஏற்க எடப்பாடி-ஓபிஎஸ் தரப்பு தயாராக இருக்கிறது. ஆனால், நான் எதிலும் தலையிடக்கூடாது என நினைக்கிறார்கள்.  இதை மனதில் வைத்தே திவாகரனும் அவர்களுடன் பேசி வருகிறார். இதுபற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?. நமக்கு துரோகம் செய்தவர்களோடு மீண்டும் இணைந்தால் என்ன பேசுவார்கள்? உங்களுக்கு இதில் சம்மதம் எனில் என்னை விட்டு விடுங்கள். என்னை நம்பி வந்தவர்களோடு, இப்போது தொடங்கியுள்ள அம்மா முன்னேற்ற கழகத்தை நான் தொடர்ந்து  நடத்திக் கொள்கிறேன்’ என சசிகலாவிடம் கூறினாராம் தினகரன்.
 
அதற்கு சசிகலாவோ ‘ பொறுமையாக இரு. இப்போதுதான் எல்லாம் கூடி வருகிறது. எல்லாம் நல்ல படியாக நடக்கும்’ என்கிற ரீதியில் சசிகலா பேச அங்கிருந்து ஏமாற்றத்துடன் வெளியேறினாராம் தினகரன். இனிமேல் இவர்களை நம்பி பலனில்லை. நமக்கென செல்வாக்கு இருக்கிறது. மக்கள் ஆதரவு இருக்கிறது. தனியாக செயல்படுவதே நல்லது என தன்னுடைய ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறாராம் தினகரன்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

2 மாதம் சம்பளம் வரவில்லை. பிச்சை எடுக்க அனுமதி வேண்டும்: காவலரின் கடிதத்தால் பரபரப்பு