Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

வெடித்து சிதறிய சசிகலா - பிரஸ் மீட் கொடுக்காமல் தெறித்து ஓடிய தினகரன்

Advertiesment
வெடித்து சிதறிய சசிகலா - பிரஸ் மீட் கொடுக்காமல் தெறித்து ஓடிய தினகரன்
, செவ்வாய், 8 மே 2018 (14:32 IST)
சிறையில் தன்னை சந்திக்க வந்த தினகரன் மற்றும் குடும்ப உறுப்பினர்களிடம் சசிகலா கடும் கோபத்தை காட்டியதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

 
தொடக்கத்திலிருந்தே சசிகலாவின் பேச்சை தினகரன் கேட்காமல் நடந்து கொள்கிறார். திவாகரன், ஜெயானந்த் உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்களை ஒதுக்கி வைத்து அரசியல் செய்கிறார் என்கிற புகார்கள்கள் சசிகலாவிடம் தொடர்ந்து கூறப்பட்டு வந்தது. விவேக் ஜெயராமன் அதை தொடர்ந்து செய்து வந்தார். தற்போது அவர் இந்த விஷயத்தில் அவ்வளவாக தலையிடுவதில்லை.
 
தற்போது திவாகரன் - தினகரன் மோதல் சசிகலா குடும்பத்தினரிடையே பிரிவினியை ஏற்படுத்தியுள்ளது. தினகரன் பற்றி ஏராளமான புகார்களை திவாகரன் வெளிப்படையாக ஊடகங்களுக்கு பேட்டியளித்தார். இந்த விவகாரம் பூதாகரம் ஆகியதும், தினகரன், திவாகரன் இருவருமே சசிகலாவை சந்திக்க விரும்பினார்கள். ஆனால், அவர்கள் இருவர்கள் மீதும் கடுமையான கோபத்தில் இருந்த சசிகலா யாரையும் சந்திக்க விருப்பம் தெரிவிக்கவில்லை.
ஆனாலும், தினகரன், சசிகலாவின் உறவினர்கள் பழனி, பாலாஜி, டாக்டர் வெங்கட் உள்ளிட்ட 11 பேர் சசிகலாவை சந்திக்க விருப்பம் தெரிவித்து அக்ரஹாரா சிறைக்கு கடிதம் கொடுத்திருந்தனர். இந்நிலையில், அவர்கள் அனைவரையும் நேற்று சசிகலா சந்தித்தார்.
webdunia

 
அப்போது இறுக்கமான முகத்துடன் இருந்த சசிகலா, தொடக்கம் முதல் நான் கூறியதை நீ கேட்கவில்லை. அக்கா இல்லாமல் போனதால் அதிமுகவை உடைத்து சிதைத்து விட்டீர்கள்.  இதற்கு நம் குடும்பமே காரணமாகி விட்டது எனக்கு மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளது. இப்போது, துரோகிகளுக்கு கொண்டாட்டமாக இருக்கும். அவர்கள் டீமில் இருந்து என்னை பார்க்க நேரம் கேட்டுள்ளனர். இப்போது நான் எதுவும் கூற முடியாது. நீங்களே பேசி ஒரு முடிவுக்கு வாங்க. அதுவரைக்கும் என்னை தொந்தரவு செய்யாதீர்கள்” என கோபமாக பேசி அனைவரையும் அனுப்பி விட்டாராம்.
 
எனவே, வழக்கமாக சசிகலாவை பார்த்துவிட்டு, சிறை வாசலிலேயே ஓரு பிரஸ் மீட் கொடுக்கும் தினகரன், இந்த முறை செய்தியாளர்களிடம் பேசாமல் வேகமாக காரில் ஏறி சென்றுவிட்டார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மத்திய அரசை நம்பினால் ஒரு சொட்டு நீர் கூட கிடைக்காது - தமிழக அரசு வாதம்