Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

வாழ்க வசவாளர்கள்! விமர்சனம் செய்தவர்களை வாழ்த்திய டிடிவி தினகரன்!

Advertiesment
வாழ்க வசவாளர்கள்! விமர்சனம் செய்தவர்களை வாழ்த்திய டிடிவி தினகரன்!
, வியாழன், 11 பிப்ரவரி 2021 (16:58 IST)
சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற சசிகலா சமீபத்தில் விடுதலை ஆன நிலையில் அவர் தற்போது சென்னை திரும்பியுள்ளார். இதனை அடுத்து அதிமுகவில் உள்ள அமைச்சர்கள் பலரும் முதல்வரும், சசிகலா மற்றும் தினகரன் குறித்து கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர் 
 
தன்னைப் பற்றி விமர்சனம் செய்து வருபவர்களை பாராட்டி டிடிவி தினகரன் தனது டுவிட்டரில் ஒரு நீண்ட பதிவை பதிவு செய்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
 
நிதானம் இழந்து, தன்னிலை மறந்து, பதற்றத்தில், கோபத்தின் உச்சிக்கே சென்று, பதவி வெறியில் தங்களது பேராசைகள் எல்லாம் நிராசை ஆகிவிடுமோ என்ற பயத்தில் அதிகார போதை கண்ணை மறைக்கும் அளவிற்கு தாங்கள் வகிக்கின்ற பதவியின் மாண்பையும் மறந்து மனித நிலையிலிருந்து மாறி காட்டு மிருகங்கள் போல கடும் கூச்சலிட்டு வானுக்கும் மண்ணுக்கும் குதிக்கும் ஒரு சில அற்பப் பிறவிகளைப் பார்த்தால் சிரிப்புதான் வருகிறது.  
 
பதவி வெறி படுத்தும் பாடு எப்படியெல்லாம் இவர்களைப் பேச வைக்கிறது. தங்கள் வாயாலேயே தாங்கள் அடிமைகளாக இருந்தோம் என அவர்களை அவர்களாகவே தரம் தாழ்த்திக்கொள்வது உண்மையிலேயே வருத்தமளிக்கிறது. வாழ்க வசவாளர்கள்
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

’’ ஏலே ’’திரைப்படம் தொலைக்காட்சிகளில் ரிலீஸ்.... தயாரிப்பு நிறுவனம் அதிரடி