Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சசிகலாவை இன்று சந்திக்கும் பிரேமலதா விஜயகாந்த்!

சசிகலாவை இன்று சந்திக்கும் பிரேமலதா விஜயகாந்த்!
, வியாழன், 11 பிப்ரவரி 2021 (08:24 IST)
சிறையில் இருந்து விடுதலை ஆகியுள்ள அமமுக பொதுச்செயலாளர் சசிகலாவை தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் சந்திக்க உள்ளார்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா சொத்துக் குவிப்பு வழக்கில் நான்காண்டு சிறை தண்டனை பெற்று இரு தினங்களுக்கு முன்னர் பெங்களூரில் இருந்து சென்னை திரும்பியுள்ளார். அவரின் விடுதலை தமிழக அரசியலில் சலசலப்பையும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

இப்போது சென்னையில் தி நகரில் உள்ள அவரது இல்லத்தில் இருக்கும் சசிகலா தீவிர அரசியலில் கண்டிப்பாக ஈடுபடுவேன் எனக் கூறியுள்ளார். இந்நிலையில் அதிமுக கூட்டணியில் இருக்கும் தேமுதிகவின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் இன்று சசிகலாவை சந்திக்க உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

அதிமுக கூட்டணியில் தாங்கள் கேட்கும் சீட்களை கொடுக்கும் அளவுக்கு அவர்கள் தயாராக இல்லை என்பதால் பிரேமலதா கடந்த சில நாட்களாக கூட்டணியில் அதிருப்தி தெரிவித்து பேசிக்கொண்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

குடியுரிமை சட்ட விவகாரம்; பாஜக கல்யாணராமன் மீது மேலும் வழக்கு!