கடந்த 2016ம் ஆண்டு தேர்தலில் அதிமுக கூட்டணியில் இரட்டை இலையில் போட்டியிட்டவர் தனியரசு என்பது தெரிந்ததே. கொங்கு இளைஞர் பேரவைத் தலைவரான இவர் பெரும்பாலும் அதிமுகவுக்கு ஆதரவாகவும், அதன்பின்னர் தினகரனுக்கு ஆதரவாகவும் இருந்து வந்த நிலையில் சசிகலா தற்போது பெங்களூரில் இருந்து சென்னை வந்துள்ள நிலையில் அவரை கொங்கு இளைஞர் பேரவை தலைவர் தனியரசு எம்எல்ஏ சந்திக்க உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன
சசிகலா சமீபத்தில்தான் கொரோனா வைரஸிலிருந்து குணமாகி உள்ளதால் அவர் யாரையும் சந்திக்க மாட்டார் என்றும் முழு ஓய்வு எடுத்து வருவதாகவும் அவரது தரப்பில் இருந்து கூறப்படுகிறது. இருப்பினும் சசிகலா உடல்நலன் குறித்து விசாரிப்பதற்காக அவரை சந்திக்க உள்ளதாகவும் இந்த சந்திப்பு அரசியல் சந்திப்பாக இருக்காது என்றும் தனியரசு எம்எல்ஏ தெரிவித்துள்ளார்
தனியரசு எம்எல்ஏவை சந்திக்க சசிகலா சம்மதிப்பாரா? அப்படியே சம்மதித்தால் இந்த சந்திப்பில் என்ன பேசுவார்கள் என்பது குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. மேலும் தனியரசுவை அடுத்து கருணாஸ் எம்.எல்.ஏவும் சசிகலாவை சந்திக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.