Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சசிகலா தரப்பில் பொதுக்குழு கூட்டம் - எடப்பாடிக்கு தினகரன் செக்

Advertiesment
சசிகலா தரப்பில் பொதுக்குழு கூட்டம் - எடப்பாடிக்கு தினகரன் செக்
, ஞாயிறு, 17 செப்டம்பர் 2017 (11:13 IST)
சசிகலா மற்றும் தினகரன் தரப்பில் அதிமுக பொதுக்குழு கூட்டம் வருகிற அக்டோபர் மாதம் நடைபெறும் எனத் தெரிகிறது.


 

 
இரு அணிகளும் ஒன்றாக இனைந்த பின், சமீபத்தில் பொதுக்குழு கூடி மொத்தம் 12 தீர்மானங்களை நிறைவேற்றியது. 8வது தீர்மானமாக, சசிகலாவின் நியமனம் செல்லாது என அறிவிக்கப்பட்டது. இந்த விவகாரம் தினகரன் தரப்பிற்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. அதோடு, தற்காலிக பொதுச்செயலாளர் சசிகலாவின் அனுமதி இல்லாமல் கூட்டப்பட்ட இந்த கூட்டமும், அதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களும் செல்லாது எனக் கூறிவருகிறார்.
 
அதோடு, ஏற்கனவே தினகரன் தரப்பில் டெல்லிக்கு சென்ற அவரின் ஆதரவு எம்.பிக்கள், நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையில்  இருக்கும் போது, சசிகலாவின் அனுமதியில்லாமல், பொதுக்குழு கூட்டத்தை கூட்டியதால், அதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் செல்லாது என மனு அளித்துள்ளனர். 
 
இது எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ.பி.எஸ் தரப்பினருக்கு சிக்கலை ஏற்படுத்தியிருக்கிறது. மேலும், வருகிற 19ம் தேதி திருச்சியில் பொதுக்கூட்டத்தை நடத்தி தனது பலத்தை காட்டுவதோடு, அக்டோபர் மாதம் சசிலாவின் ஒப்புதலோடு பொதுக்குழு கூட்டத்தை நடத்தி முடிக்க வேண்டும் என தினகரன் திட்டமிட்டுள்ளார் எனத் தெரிகிறது.
 
எடப்பாடி தலைமையில் கூட்டப்பட்ட பொதுக்குழுவின் தீர்மானங்களை தேர்தல் கமிஷனிடம் சமர்பிக்கு முன், தினகரன் தரப்பில் பொதுக்குழு கூட்டத்தை நடத்தி அங்கு நிறைவேற்றப்படும் தீர்மானங்களை தேர்தல் ஆணையத்திடம் சமர்பிக்க தினகரனின் ஆதரவாளர்கள் முடிவு  செய்துள்ளனர். அந்த கூட்டத்தில் தினகரனின் ஆதரவு எம்.எல்.ஏக்கள், எம்.பிக்கள் மற்றும் நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொள்வார்கள் எனத் தெரிகிறது. 
 
அப்படி நடந்தால், அது எடப்பாடி மற்றும் ஓ.பி.எஸ் தரப்பி கடும் நெருக்கடியை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மக்களை திரட்டி போராட்டம் நடத்துவோம் - மு.க.ஸ்டாலின் அதிரடி