Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பெண்ணோட வயிற்றில தான பிறந்தீங்க? உதயநிதியை சாடிய டிடிவி!!

Advertiesment
பெண்ணோட வயிற்றில தான பிறந்தீங்க? உதயநிதியை சாடிய டிடிவி!!
, வியாழன், 7 ஜனவரி 2021 (11:43 IST)
தானும் ஒரு பெண்ணின் வயிற்றில் பிறந்தவர் என்பதை மறந்துவிட்டு உதயநிதி பேச்சு என டிடிவி தினகரன் விமர்சனம். 

 
தமிழகத்தில் தேர்தல் நெருங்கி வருவதை முன்னிட்டு ‘விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல்’ என்ற தலைப்பில் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தமிழகம் முழுவதும் பிரச்சாரம் செய்து வருகிறார். 
 
தனது பிரச்சாரத்தின் போது உதயநிதி, எடப்பாடி பழனிச்சாமி சசிகலா காலில் விழுந்து கிடந்தார் என பேசினார். அத்தோடு விட்டா அந்தம்மா காலுக்குள்ளயே புகுந்துருப்பாரு என பேசினார். இந்நிலையில் இது குறித்து டிடிவி தினகரன் தனது டிவிட்டர் பக்கத்தில், 
webdunia
பெருந்தலைவர் காமராஜர் உள்ளிட்ட மிகப்பெரிய தலைவர்களை எல்லாம் இழிவுபடுத்தி பேசிய தீயசக்தி கருணாநிதியின் பேரன் என்பதை மு.க.ஸ்டாலினின் மகன் நிரூபித்திருக்கிறார். கண்ணியத்திற்கும் தி.மு.கவுக்கும் ஒரு நாளும் சம்பந்தமே இருந்ததில்லை என்பதற்கு இது இன்னொரு சாட்சி. 
 
நெஞ்சம் முழுக்க அழுக்கும், துர்சிந்தனையும் நிரம்பிய ஒருவரால்தான் இப்படி வக்கிரமாக பேச முடியும். தானும் ஒரு பெண்ணின் வயிற்றில்  பிறந்தவர் என்பதை மறந்துவிட்டு பேசியிருக்கிறார். அவர் வந்த வழி அப்படி. பெண்களை பெரிதும் மதிக்கிற தமிழ்ச் சமூகத்தில் இத்தகைய குணம் கொண்டவர்களும் இருக்கிறார்கள் என்பது வருத்தமளிக்கிறது என அமமுக பொதுச்செயளாலர் டிடிவி தினகரன் பதிவிட்டுள்ளார். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

திரையரங்கில் 100 சதவீத அனுமதி வழக்கு! – நாளை விசாரணை