தங்கள் சொந்தப் பணத்தைக் கொடுப்பது போல ஆளுங்கட்சி விளம்பரம் செய்து கொள்வது ஆபாசமானது என நடிகர் கமல்ஹாசன் டுவீட் பதிவிட்டுள்ளார்.
இன்னும் சில மாதங்களில் தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. எனவே அத்தனை கட்சிகளும் தொடர்ந்து பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் தமிழக அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. இந்நிலையில்,கமல்ஹாசன் இன்றைய பிரசாரத்தில் இளைஞர்கள் முதலாளிகாக உருவாக்கப்படுவார்கள் எனக் கூறியுள்ளார்.
தமிழகத்தில் இன்னும் சில மாதத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் திராவிட கட்சிகளுக்குப் போட்டியாக கமல்ஹாசன் தேர்தலை சந்திக்கவுள்ளார்.
அவருக்கு எதிராக அதிமுக அதிக விமர்சனங்களைத் தெரிவிக்க கமலும் கடுமையாக விமர்சித்து, சமீபத்தில் லஞ்சப்பட்டியலை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.அவர் செல்லுமிடமெல்லாம் பிரச்சாத்தின்போது, மக்கள் கூட்டம் கூடுகின்றனர்.
இந்நிலையில், தமிழக அரசு பொங்கல் பரிசாக குடும்ப அட்டைதாரர்களுக்கு ரு.2500 கொடுப்பதுடன் கரும்பு உள்ளிட்ட பொர்ட்களை வழங்கை வருகிறது. இதுகுறித்து தமிழக அரசு விளம்பரம் செய்வதுடன் வீடுகளுக்கு டோக்கன் விநியோகித்து வருகிறது. இதுகுறித்து ஏற்கனவே டோக்கர் முறைக்கு எதிராக வழக்கு தொடுத்த நிலையில் தற்போது நடிகர் கமல்ஹாசன் டுவீட் பதிவிட்டுள்ளார்.
அதில், ரேசன் கடையில் கொடுப்பது மாமனார் வீட்டு பொங்கல் சீதனம் அல்ல. தங்கள் சொந்தப் பணத்தைக் கொடுப்பது போல ஆளுங்கட்சி விளம்பரம் செய்து கொள்வது ஆபாசமானது. உயர்நீதிமன்றம் உத்தரவிட்ட பின்னரும் ரேஷன் கடை பிரச்சாரம் தொடர்வது குள்ள நரித்தனம். ஒரிஜினல் நரிகள் மன்னிக்க.