உலகம் முழுவதும் கொரோனாவிற்கு பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1.61 கோடி ஆக உயர்ந்துள்ளதால் உலக நாடுகள் இடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
உலக சுகாதார மையம் சற்றுமுன் அறிவித்த தகவலின்படி உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 16,198,330 ஆகும். அதேபோல் உலக அளவில் கொரோனாவில் இருந்து 99.7 லட்சம் பேர் மீண்டனர் என்பதும், உலக அளவில் கொரோனாவிற்கு 6.47 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது
உலக அளவில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட அமெரிக்காவில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,315,709 என்பதும் பலியானவர்களின் எண்ணிக்கை 149,398 என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் அமெரிக்காவில் கொரோனா வைரஸ்க்கு ஒரே நாளில் 67382 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது என்பதும், அமெரிக்காவில் ஒரே நாளில் கொரோனாவிற்கு 905 பேர் உயிரிழந்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
அமெரிக்காவை அடுத்து பிரேசிலில் ஒரே நாளில் 1111 பேர் கொரோனாவிற்கு உயிரிழந்துள்ளனர் என்பதும் பிரேசில் நாட்டில் மொத்த பாதிப்பு 2,396,434 என்பதும் ,மொத்த பலி எண்ணிக்கை 86,496 என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில் இதுவரை கொரோனாவால் 1,385,494 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதும், கொரோனாவால் பலியானோர் எண்ணிக்கை 32,096ஆக உயர்ந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது