Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஊழலை ஒழிக்க வந்த உத்தமர், வாய்ச்சவடால் வீரர் - ஸ்டாலினை வறுத்த டிடிவி!

Advertiesment
ஊழலை ஒழிக்க வந்த உத்தமர், வாய்ச்சவடால் வீரர் - ஸ்டாலினை வறுத்த டிடிவி!
, செவ்வாய், 28 ஜூன் 2022 (11:28 IST)
‘ஊழலை ஒழிக்க வந்த உலக மகா உத்தமர் போல’ பேசியதெல்லாம் வாய்ச்சவடால் தானா என ஸ்டாலினுக்கு டிடிவி தினகரன் கேள்வி. 

 
முன்னாள் அமைச்சர் வேலுமணி மீதான ஊழல் புகாரில் தொடர்புடைய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்காமல் திமுக அரசு 8 மாதங்களாக இழுத்தடிப்பது மக்களிடையே பெருத்த சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது என்று அமமுக பொது செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
 
இது குறித்து அவர் தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டது பின்வருமாறு... முன்னாள் அமைச்சர் வேலுமணி மீதான ஊழல் புகாரில் தொடர்புடைய 4 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் உட்பட 12 அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க லஞ்ச ஒழிப்புத் துறைக்கு அனுமதி வழங்காமல் திமுக அரசு 8 மாதங்களாக இழுத்தடிப்பது மக்களிடையே பெருத்த சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
 
தேர்தலுக்கு முன்பு, ‘ஊழலை ஒழிக்க வந்த உலக மகா உத்தமர் போல’ மேடைக்கு மேடை பேசியதெல்லாம் முதலமைச்சர் திரு.ஸ்டாலினுக்கு மறந்து போய்விட்டதா? ஊழல் செய்த  அத்தனை பேரையும் தனி நீதிமன்றம் அமைத்து தண்டிக்கப் போவதாக வாய்ச்சவடால் விட்டவர்கள், விசாரணைக்கு அனுமதிக்கவே இவ்வளவு தயக்கம் காட்டுவது ஏன்? 
 
பழனிசாமி கம்பெனியோடு முன்பு போட்டுக்கொண்டதாக சொல்லப்பட்ட 60:40 ஒப்பந்தம், நடவடிக்கை எடுக்க விடாமல் தடுக்கிறதா? இன்னும் எத்தனைக் காலத்திற்கு இப்படி கூட்டுக் களவாணித்தனம் செய்து தமிழ்நாட்டு மக்களை ஏமாற்றப் போகிறீர்கள்? 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஆன்லைன் சூதாட்டங்களுக்கு தடை..! – அறிக்கையில் இருப்பது என்ன?