Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இன்னும் என்னென்ன தண்டனைகளை வாக்களித்த மக்களுக்கு வழங்கப்போகிறீர்கள்: டிடிவி தினகரன்

Advertiesment
ttv dinakaran
, புதன், 11 மே 2022 (14:10 IST)
திமுக அரசு தொடங்கிய ஒரு ஆண்டு முடிவுற்ற நிலையில் இன்னும் நான்கு ஆண்டுகளில் வாக்களித்த மக்களுக்கு என்னென்ன தண்டனைகள் வழங்கப் வழங்கப்போகிறீர்கள் என்று டிடிவி தினகரன் கேள்வி எழுப்பி உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து டிடிவி  தினகரன் மேலும் கூறியிருப்பதாவது
 
தேர்தல் வாக்குறுதிக்கு மாறாக சொத்து வரியை மனசாட்சி இல்லாமல் 150 % வரை உயர்த்திய திமுக அரசு, தற்போது ஆண்டுதோறும் சொத்து வரியை உயர்த்துவதற்கு சட்டம் கொண்டு வந்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது.
 
ஸ்டாலின் அரசு பொறுப்பேற்று ஓராண்டு நிறைவு பெற்றிருப்பதைக் கொண்டாடும் விதமாக இதுபோன்ற தண்டனைகளை பரிசாக மக்களுக்கு கொடுத்திருக்கிறார்களோ?
 
எஞ்சிய 4 ஆண்டுகளில் இன்னும் என்னென்ன தண்டனைகளை பரிசுகளாக வாக்களித்த மக்களுக்கு வாரி வழங்கப்போகிறார்களோ?! தமிழ்நாட்டு மக்களை கடவுள்தான் காப்பாற்ற வேண்டும்." என்று டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மாணவிகளுக்கு ரூ.1000 உதவித் தொகை: அமைச்சர் பொன்முடி முக்கிய தகவல்!