Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இவர்கள் மானமுள்ளவர்கள்தானா? - தினகரன் விளாசல்

Advertiesment
இவர்கள் மானமுள்ளவர்கள்தானா? - தினகரன் விளாசல்
, ஞாயிறு, 17 செப்டம்பர் 2017 (13:52 IST)
முதலமைச்சர் பதவியில் இருந்து கொண்டு மற்றவர்களை மிரட்டும் தொனியில் எடப்பாடி பழனிச்சாமி பேசுவது நல்லதல்ல என டிடிவி தினகரன் கூறியுள்ளார்.


 

 
சமீபத்தில் அண்ணா பிறந்த நாள் விழாவில் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, தினகரன் பற்றி மிகவும் ஆவேமாக பேசினார். விரைவில் தினகரன் மாமியார் வீட்டிற்கு செல்வார் என தெரிவித்தார்.
 
இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய தினகரன் “ முதல்வர் பதவியில் அமர்ந்து கொண்டு மற்றவர்களை மிரட்டும் தொனியில் எடப்பாடி பழனிச்சாமி பேசுவது முறையல்ல. ஜெ.வின் மரணத்திற்கு சசிகலாவும் நானுமே காரணம் என திண்டுக்கல் சீனிவாசன் பேசுகிறார். இவர்கள் மாண்புமிகுக்களா இல்லை மானமுள்ளவர்களா எனத் தெரியவில்லை. சசிகலா பொதுச்செயலாளர் ஆனபோது இவர்கள் அனைவரும் அவரின் காலில் விழுந்தனர். அவரால்தான் பதவிகளை பெற்றனர். தற்போது அவரையே தூக்கி எறிய முயல்கின்றனர். பதவிக்காக எது வேண்டுமானாலும் பேசக்கூடாது.
 
சேகர் ரெட்டி வழக்கில் தன்னையும், தனது மகனையும் எந்நேரமும் சிபிஐ அதிகாரிகள் கைது செய்வார்கள் என என்னிடம் கூறி எடப்பாடி பழனிச்சாமி பயந்தார். எல்லா அமைச்சர்களும் சிபிஐ வசம் சிக்கியிருக்கிறார்கள். அதனால்தான், தற்போது எங்களுக்கு எதிராக பேசிக்கொண்டிருக்கிறார்கள்.
 
122 எம்.எல்.ஏக்களை கூவத்தூரில் தங்க வைத்துதான், பழனிச்சாமியை முதல்வராக்கினார் சசிகலா. தற்போது உங்களை வீட்டிற்கு அனுப்ப 18 எம்.எல்.ஏக்களை விடுதியில் தங்க வைத்திருப்பதில் என்ன தவறு இருக்கிறது?” எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இரட்டை இலையை கைப்பற்றும் எடப்பாடி? - தினகரன் அதிர்ச்சி