தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் கொரோனாவும் அதிகரிக்க தொடங்கியுள்ளதால் கட்சியினர் பின்பற்ற வேண்டிய கட்டுப்பாடுகளை டிடிவி தினகரன் அறிவித்துள்ளார்.
தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6ல் நடைபெற உள்ள நிலையில் கொரோனா பரவல் அதிகரிக்க தொடங்கியுள்ளது. சில கட்சி வேட்பாளர்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதால் அரசியல் கட்சிகள் தேர்தலை எதிர்கொள்வதில் சிரமங்களை சந்தித்து வருகின்றனர்.
இந்நிலையில் கொரோனா விதிமுறைகளை பின்பற்றி பாதுகாப்பாக தேர்தல் பணிகளை மேற்கொள்ள அமமுக பொது செயலாளர் டிடிவி தினகரன் தனது கட்சியினருக்கு அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
அதில் ”தான் உட்பட அமமுகவினர் மக்களிடம் பிரச்சாரத்திற்கு செல்லும்போதும், கூட்டணி கட்சியினர் பிரச்சாரத்திற்கு செல்லும்போதும் சமூக இடைவெளி கடைபிடிக்க வேண்டும். கண்டிப்பாக பிரச்சார கூட்டங்களில் அனைவரும் மாஸ்க் அணிய வேண்டும். அதுபோல அமமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு மேடையில் சால்வை அணிவித்தல், பூங்கொத்து அளித்தல் முதலியவற்றை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.