Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மிடாஸ் ஆலையா? அது எங்க இருக்கு? டிடிவி தினகரன் கேள்வி

Advertiesment
மிடாஸ் ஆலையா? அது எங்க இருக்கு? டிடிவி தினகரன் கேள்வி
, திங்கள், 29 அக்டோபர் 2018 (19:42 IST)
அமமுக கட்சியின் தலைவர் டிடிவி தினகரன் மிடாஸ் ஆலைக்கும் எனக்கும் எந்த தொடர்பும் கிடையாது என்று பேட்டி அளித்துள்ளார். இதில் கவனிக்கப்பட வேண்டியது என்னவெனில், மிடாஸ் ஆலை எங்கு இருக்கிறது என்பது கூட அவருக்கு தெரியாதாம்.
 
இது குறித்து தினகரன் பேசியது விரிவாக, டெண்டர் முறைகேடு விவகாரத்தில் மடியில் கனம் இல்லை, வழியில் பயம் இல்லை என்று கூறிய முதல்வர், தற்போது சிபிஐ விசாரிக்க கூடாது என்று உச்சநீதிமன்றத்திற்கு ஏன் சென்றிருக்கிறார்? 
 
பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை, பாஜகவை தாக்கி பேசுகிறார். ஆனால் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூட்டணிக்காக டெல்லி போய் நிற்கிறார். 
 
அதேபோல்ல், மிடாஸ் ஆலைக்கும் எனக்கும் எந்த தொடர்பும் கிடையாது. மிடாஸ் ஆலை எங்கு இருக்கிறது என்பது கூட தெரியாது. அதிமுக ஆட்சி வீழ்வது உறுதி. துரோகங்கள் ஜெயித்ததாக வரலாறு இல்லை. 
 
மக்கள் மன்றத்தில் நாங்கள் வெற்றி பெறுவோம். என்னைக்கண்டு முதல்வர் மற்றும் ஆட்சியாளர்கள் பயப்படுகிறார்கள். என்னைப் பற்றி பேசவில்லை என்றால் அவர்களுக்கு தூக்கம் வராது போல என பேசியுள்ளார். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மே.தீவுகள் பந்துவீச்சை வெளுத்து வாங்கிய ரோஹித்,சர்மா...?