மகனுக்கு சூடு வைத்த தாய், கள்ளக்காதலன் கைது

திங்கள், 5 நவம்பர் 2018 (18:49 IST)
கேரளாவிலுள்ள இடுக்கி மாவட்டத்தில் வசித்து வரும் சூடியாகோஸ் என்பவருக்கு அசாமோல் என்ற மனைவி இருக்கிறார்.இவருக்கு ஒரு மகன்  உள்ளார் ,அவர் அருகிலுள்ள பள்ளியில் நான்கால் வகுப்பு படிக்கிறார்.
கேரளாவிலுள்ள ஒரு அரசு மருத்துவமனையில் அதிகாரியாக இருக்கு ராதாகிருஷ்ணன் என்பவருக்கும், அசாமலுக்கும் பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் அது உடல் கள்ளக்காதலாக மாறியது.
 
இந்நிலையில் அசாமால் ராதாகிருஷ்ணனுடன் சேர்ந்து கொண்டு உல்லாசத்துக்கு இடையூறாக இருந்த தன் மகனுக்கு சூடு போட்டுள்ளார்.
 
எனவே சூடும் போடும் போது சுறுவன் வலி தாளாமல் சப்தம்போட்டிருக்கிறான்.அருகில் குயிருந்தவர்கள் இது பற்றி விசாரித்தபோது எதையோ சொல்லி சமாளித்துள்ளனர்.
 
இந்நிலையில் நேற்று இரவில் டாக்டர்,  கொடூரத்தின் உச்சிக்கே சென்று சிறுவனின் அந்தரங்க உறுப்பில் சூடு போட்டுள்ளார். அதனால் ஏற்பட்ட காயத்துடன் இந்தக் கொடுமையை அருகில் உள்ளவர்களிடம் கூறியிருக்கிறான் சிறுவன்.இதனையடுத்து போலீஸாருக்கு தகவல் தெரிவித்த நிலையில் இருவரும் தப்பி ஓடிவிட்டனர்.
 
இதனையடுத்து  போலீஸார் இருவரின் செல்பேசி எண்ணை வைத்து டிரேஸ் செய்து கண்டுபிடித்து  போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்து அவர்களை சிறையில் அடைத்தனர்.
 
சிறுவன் தற்போது மருத்துவமனியில் சிகிச்சை பெற்றுவருகிறான் என்று செய்திகள் தெரிவிக்கின்றன.

வெப்துனியாவைப் படிக்கவும்

அடுத்த கட்டுரையில் தாஜ்மஹாலுக்குள் தொழுகை கூடாது : உச்ச நீதிமன்றம்