மீண்டும் எடப்பாடியுடன் இணைய திட்டமா? டிடிவி தினகரன் கூறிய பதில்..!

Siva
ஞாயிறு, 10 ஆகஸ்ட் 2025 (10:50 IST)
டிடிவி தினகரன், எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அ.தி.மு.க.வுடன் மீண்டும் இணைந்து செயல்படும் எண்ணம் இல்லை என்று திட்டவட்டமாக மறுத்துள்ளார்.
 
வில்லிவாக்கத்தில் நடந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த தினகரன், ஓ.பன்னீர்செல்வத்தை மீண்டும் அ.தி.மு.க. கூட்டணிக்குள் கொண்டுவர வேண்டும் என தாம் எதிர்பார்ப்பதாகவும், பாஜக மேலிடம் அதை செய்யும் என்று நம்புவதாகவும் கூறினார். ஓ.பி.எஸ். மீண்டும் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்தால் அது தனக்கு மகிழ்ச்சி தரும் என்றும் அவர் தெரிவித்தார்.
 
மேலும், தினகரன், தங்கள் கட்சியான அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம், கடந்த ஏழு ஆண்டுகளை நிறைவு செய்து எட்டாவது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ள நிலையில், எடப்பாடி பழனிச்சாமியுடன் உறவு பாராட்டி அ.தி.மு.க.வுடன் இணையும் எண்ணம் ஒருபோதும் இல்லை என்று திட்டவட்டமாக குறிப்பிட்டார். இவரது இந்த கருத்து அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஈபிஎஸ்ஸின் 'எழுச்சிப் பயணம்' மீண்டும் தொடக்கம்: தேதி, இடத்தை அறிவித்த அதிமுக..!

ஸ்மிருதி மந்தனா திருமணம் ஒத்திவைப்பு: திடீரென ஏற்பட்ட விபரீத நிகழ்வு என்ன?

குறிவைத்தால் தவற மாட்டேன்; தவறினால் குறியே வைக்க மாட்டேன்.. எம்ஜிஆர் பஞ்ச் டயலாக்கை பேசிய விஜய்..!

4 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும்: ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்த வானிலை ஆய்வு மையம்..!

சீமானின் மாடு மேய்க்கும் திட்டத்திற்கு அனுமதி மறுப்பு: சபநாயகர் காரணமா?

அடுத்த கட்டுரையில்
Show comments