அதிமுக கூட்டணியில் இருந்து பாஜக வெளியேறி இருப்பது குறித்து அமமுக பொதுச்செயளாலர் டிடிவி தினகரனிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
தமிழகத்தில் நகர்புற உள்ளாட்சி தேர்தல் பிப்ரவரி 19 ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளதாக மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. அதை தொடர்ந்து தமிழக அரசியல் கட்சிகள் கூட்டணி மற்றும் தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரம் காட்டி வருகின்றன.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அதிமுக கூட்டணியில் இருந்த பாஜக தொகுதி உடன்பாட்டில் சமரசம் ஏற்படாததால் தனித்து போட்டியிடுவது என அறிவித்தது. தனித்துப் போட்டி என்று அறிவிப்பு வெளியானதை அடுத்து தமிழகத்தின் பல பகுதிகளில் பாஜகவினர் இதனை கொண்டாடினர்.
இந்நிலையில் இது குறித்து அமமுக பொதுச்செயளாலர் டிடிவி தினகரனிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அவர் கூறியதாவது, அதிமுக கூட்டணியில் இருந்து பாஜக வெளியேறி இருக்கிறது. எடப்பாடியை பற்றி பாஜக காலதாமதமாக புரிந்து கொண்டுள்ளார்கள்.
இவர்கள் முன்பே சுதாரித்து இருந்தால் ஒரு முறைகேடான ஆட்சியை தடுத்திருக்கலாம் என்பது என்னுடைய கருத்து என பேட்டியளித்துள்ளார்.