Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நாட்டை முன்னேற்றப் பாதையில் அழைத்துச் செல்லும் பட்ஜெட்: எடப்பாடி பழனிசாமி பாராட்டு

Advertiesment
நாட்டை முன்னேற்றப் பாதையில் அழைத்துச் செல்லும் பட்ஜெட்:  எடப்பாடி பழனிசாமி பாராட்டு
, செவ்வாய், 1 பிப்ரவரி 2022 (17:38 IST)
மத்திய பட்ஜெட் என்று நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்களால் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் இந்த பட்ஜெட் குறித்து பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்
 
 காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, முன்னாள் நிதி அமைச்சர் ப சிதம்பரம், மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவர்கமல்ஹாசன் உள்பட பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர் என்பதும் பெரும்பாலான எதிர்க்கட்சி தலைவர்கள் பட்ஜெட்டை கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் சமீபத்தில் பாஜகவை கூட்டணியிலிருந்து கழட்டிவிட்ட அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி பட்ஜெட்டை பாராட்டியுள்ளார்
 
நம் நாட்டை முன்னேற்ற பாதையில் அழைத்துச் செல்லும் பட்ஜெட் என்றும் இந்த பட்ஜெட்டை தாக்கல் செய்ய உதவிய பிரதமர் மற்றும் நிதி அமைச்சருக்கு அதிமுக சார்பில் வாழ்த்துக்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ராகுலின் விமர்சனத்திற்கு அமைச்சர் நிர்மலா சீதாராமன் பதிலடி