Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

எம்ஜிஆர் அவர்களின் திருஉருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை

Advertiesment
karur
, செவ்வாய், 28 மார்ச் 2023 (22:21 IST)
கரூர் மாவட்ட அதிமுக கட்சி அலுவலகத்தில் உள்ள புரட்சித் தலைவர், பொன்மனச் செம்மல் எம்ஜிஆர் அவர்களின் திருஉருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் அனைத்தும் செல்லும் என்று சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியது.

அதனைத் தொடர்ந்து முன்னாள் போக்குவரத்துத்துறை அமைச்சரும், கரூர் மாவட்ட கழக செயலாளர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் அவர்களின் ஆலோசனைப்படி  கரூர் மாவட்ட அதிமுக சார்பில் கரூர் மாவட்ட அதிமுக அலுவலகத்தில் இருந்து, கரூர் பேருந்து நிலையம் வரை நடந்து சென்று பட்டாசு வெடித்து, இனிப்புகள் வழங்கி அதிமுக வினர் மகிழ்ச்சியை கொண்டாடினர். அப்பொழுது கழக பொதுச்செயலாளர் எடப்பாடியார் வாழ்க என கோஷமிட்டனர். 
 
பின்னர் கரூர் மாவட்ட அதிமுக கட்சி அலுவலகத்தில் உள்ள புரட்சித் தலைவர், பொன்மனச் செம்மல் எம்ஜிஆர் அவர்களின் திருஉருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சீன மொழியை தொடர்ந்து இலங்கையில் அதிகரிக்கும் இந்தி மொழி பயன்பாடு