Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மதுரை சித்திரைத் திருவிழா: மீனாட்சி அம்மன் கோயிலில் கொடியேற்றம் தேதி அறிவிப்பு..!

மதுரை சித்திரைத் திருவிழா: மீனாட்சி அம்மன் கோயிலில் கொடியேற்றம் தேதி அறிவிப்பு..!
, செவ்வாய், 28 மார்ச் 2023 (19:50 IST)
ஒவ்வொரு ஆண்டும் மதுரையில் சித்திரை திருவிழா மிகவும் விசேஷமாக கொண்டாடப்படும் நிலையில் இந்த ஆண்டு கொடியேற்றம் தேதி குறித்து அறிவிப்பை மதுரை மீனாட்சி அம்மன் கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது 
 
உலக புகழ் பெற்ற மதுரை சித்திரை திருவிழா கொடியேற்றம் ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெறும் என்றும் மே ஐந்தாம் தேதி கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
 
ஏப்ரல் 23 முதல் மே 4 ஆம் தேதி வரை 12 நாட்கள் இந்த திருவிழா நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் தினசரி 6000 பக்தர்கள் இலவச தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என்றும் இந்த நிகழ்ச்சியின் முக்கிய நிகழ்வான திருக்கல்யாணத்தை பார்க்க 20 இடங்களில் சிசிடிவி வைக்க திட்டமிட்டுள்ளதாகவும் மதுரை மீனாட்சி அம்மன் கோயில் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர் 
 
மேலும் கள்ளழகர் நிகழ்ச்சிக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என்பதால் தேவையான பாதுகாப்பு மற்றும் வசதிகள் செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது.
 
Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம்: காங்கிரஸ் திட்டம்