Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கூவாகம் திருவிழா ; தேர்தலை தள்ளி வைக்கவேண்டும் – திருநங்கைகள் கோரிக்கை !

கூவாகம் திருவிழா ; தேர்தலை தள்ளி வைக்கவேண்டும் – திருநங்கைகள் கோரிக்கை !
, சனி, 16 மார்ச் 2019 (16:27 IST)
கூவாகத்தில் ஏப்ரல் 16 மற்றும் 17 ஆகிய தேதிதளில் திருநங்கைகளின் திருவிழா நடக்க இருப்பதால் தேர்தலை தள்ளி வைக்க வேண்டும் என திருநங்கைகள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா முழுவதும் ஏப்ரல் 18 முதல் மே 21 வரை 7 கட்டங்களாக தேர்தல் நடக்க இருக்கிறது. தமிழகத்தில் முதல் கட்டமாக ஏப்ரல் 18 ஆம் தேதி ஒரேக் கட்டமாக தேர்தல் நடக்க இருக்கிறது. ஏற்கனவே மதுரை சித்திரைத் திருவிழாவைக் காரணம் காட்டி மதுரை மக்கள் தேர்தலை தள்ளி வைக்க சொல்லி கோரிக்கை வைத்துள்ளனர்.

இந்நிலையில் இப்போது திருநங்கைகளும் தேர்தலை தள்ளி வைக்க சொல்லி மதுரை மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்துள்ளனர். இதுசம்மந்தமாக  மதுரையைச் சேர்ந்த திருநங்கைகள் செயற்பாட்டாளர் பாரதி கண்ணம்மா கூறியுள்ளதாவது ‘ஏப்ரல் 15 முதல் 17 வரை விழுப்புரத்தில் கூத்தாண்டவர் திருவிழா நடைபெறுகிறது. இந்த விழாவில் 6.5 லட்சம் திருநங்கைகள் பங்கேற்பார்கள். அவர்களால் மறுநாளே அவரவர் ஊருக்கு திரும்பி இயலாது. தேதியை மாற்றாவிட்டால் திருநங்கை சமூகத்தை புறக்கணித்ததாக ஆகிவிடும். எனவே தேர்தல் தேதியை மாற்ற வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்துள்ளோம் எனக் கூறியுள்ளார்.

திருநங்கை பாரதி கண்ணம்மா 2014 மக்களவை தேர்தலில் மதுரையில் சுயேச்சையாக போட்டியிட்டார். மேலும் சமத்துவ மக்கள் கட்சியிலும் சிலகாலம் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஆட்டோவில் பாலியல் சில்மிஷம்: பட்டப்பகலில் பெண்ணுக்கு நடந்த கொடுமை