Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

விஜயகாந்த் - எடப்பாடி பழனிசாமி சந்திப்பு: தேமுதிகவிற்கு உறுதியானதா தொகுதி பட்டியல்?

Advertiesment
விஜயகாந்த் - எடப்பாடி பழனிசாமி சந்திப்பு: தேமுதிகவிற்கு உறுதியானதா தொகுதி பட்டியல்?
, சனி, 16 மார்ச் 2019 (11:52 IST)
தமிழக முதலவ்ர் எடப்பாடி பழனிச்சாமி சற்றுமுன் தேமுதிக தலைவர் விஜய்காந்தை சந்தித்தார். இந்த சந்திப்பில் தேமுதிகவிற்கு ஒதுக்கப்படும் தொகுதி எதுவென தகவல் வெளியாகியுள்ளது. 
 
நாடாளுமன்ற தேர்தலுக்காக அதிமுக, பாஜக, தேமுதிக, பாமக உள்ளிட்ட கட்சிகள் ஒன்றிணைந்து மெகா கூட்டணி அமைத்துள்ளன. பாமகவுக்கு 7 தொகுதி, பாஜகவுக்கு 5 தொகுதி, தேமுதிகவிற்கு 4 தொகுதி என அதிமுகவின் தொகுதி பங்கீடு முடிவுக்கு வந்தது.
 
ஆனால், யாருக்கு எந்த தொகுதிகள் ஒதுக்குவது என்பதில் இன்னும் சிக்கல் நீடித்து வருகிறது. இந்நிலையில், எடப்பாடி பழனிச்சாமி விஜயகாந்தை இன்று அவரின் வீட்டில் சந்திந்தார். இந்த சந்திப்பில் தேமுதிகவிற்கு ஒதுக்கப்பட்டு தொகுதிகள் குறித்து பேசி இருக்கலாம் என தெரிகிறது. 
 
அதாவது, தேமுதிகவிற்கு கள்ளக்குறிச்சி, திருச்சி, வடசென்னை, விருதுநகர் ஆகிய 4 தொகுதிகளை அதிமுக வழங்க உள்ளதாக தெரிகிறது. இன்று மாலை அதிமுகவின் அதிகாரப்பூர்வமான தொகுதி பட்டியல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

5 வயது சிறுமியை சீரழித்த 10-ம் வகுப்பு மாணவன்