தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தேமுதிக தலைவர் விஜய்காந்தை சந்தித்தார். இந்த சந்திப்பில் தேமுதிகவிற்கு ஒதுக்கப்படும் தொகுதி எதுவென ஆலோசனை நடந்திருக்க கூடும் என தெரிகிறது.
நாடாளுமன்ற தேர்தலுக்காக அதிமுக, பாஜக, தேமுதிக, பாமக உள்ளிட்ட கட்சிகள் ஒன்றிணைந்து மெகா கூட்டணி அமைத்துள்ளன. பாமகவுக்கு 7 தொகுதி, பாஜகவுக்கு 5 தொகுதி, தேமுதிகவிற்கு 4 தொகுதி என அதிமுகவின் தொகுதி பங்கீடு முடிவுக்கு வந்தது.
ஆனால், யாருக்கு எந்த தொகுதிகள் ஒதுக்குவது என்பதில் இன்னும் சிக்கல் நீடித்து வருகிறது. இந்நிலையில், எடப்பாடி பழனிச்சாமி விஜயகாந்தை இன்று அவரின் வீட்டில் சந்திந்தார். இந்த சந்திப்பில் தேமுதிகவிற்கு ஒதுக்கப்பட்டு தொகுதிகள் குறித்து பேசி இருக்கலாம் என தெரிகிறது.
அதாவது, தேமுதிகவிற்கு கள்ளக்குறிச்சி, திருச்சி, வடசென்னை, விருதுநகர் ஆகிய 4 தொகுதிகளை அதிமுக வழங்க உள்ளதாக தெரிகிறது. அப்படி இந்த தொகுதிகள் ஒதுகக்ப்பட்டால் தேமுதிக திமுகவுடன் நேரடியாக மோதும் சூழல் உருவாகும்.
ஆம், தேமுதிகவில் ஒதுக்கப்படுவதாக கூறப்பட்டுள்ள வடசென்னை மற்றும் கள்ளக்குறிச்சியில் திமுக போட்டியிடுகிறது. அதேபோல், திருச்சி, விருதுநகரில் காங்கிரஸ் போட்டியிடுகிறது. ஒருவேளை அதிமுக ப்ளான் பண்ணி தேமுதிகவை வசமாக மாட்டிவிடுகிறதோ என்ற எண்ணம் எழுகிறது.
ஆனால், இதுதான் தொகுதி என உறுதியாகாத நிலையில், அதிமுக அதிகாரப்பூர்வமாக தொகுதிகளை ஒதுக்கிய பின்னரே தேர்தல் அரசியல் இன்னும் சூடுபிடிக்கும் என எதிர்ப்பார்க்கபடுகிறது.