Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சென்னை – திருப்பதி இடையே ரயில்கள் ரத்து! – தெற்கு ரயில்வே முக்கிய அறிவிப்பு!

Advertiesment
Train

Prasanth Karthick

, வியாழன், 7 மார்ச் 2024 (09:56 IST)
பராமரிப்பு பணிகள் காரணமாக விழுப்புரம், சென்னை, அரக்கோணம் பகுதிகளில் இருந்து திருப்பதி செல்லும் ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.



தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

காலை 5.35க்கு விழுப்புரத்தில் இருந்து புறப்படும் விழுப்புரம் – திருப்பதி எக்ஸ்பிரஸ் (எண்: 16854) மறுமார்க்கமாக திருப்பதி – விழுப்புரம் எக்ஸ்பிரஸ் (16853) ஆகிய ரயில்கள் மார்ச் 14 வரை முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.

அதுபோல அரக்கோணம் – திருப்பதி எக்ஸ்பிரஸ் (06753), மறுமார்க்கமாக திருப்பதி – அரக்கோணம் எக்ஸ்பிரஸ் (06754) ரயில்கள் மார்ச் 10 வரை ரத்து.

திருப்பதி – சென்னை செண்ட்ரல் (06728) எக்ஸ்பிரஸ், மறுமார்க்கமாக சென்னை செண்ட்ரல் – திருப்பதி எக்ஸ்பிரஸ் (06727) ரயில்கள் 10ம் தேதி வரை ரத்து.

திருப்பதி – மன்னார்குடி இடையேயான பாமணி எக்ஸ்பிரஸ் (17407) ரயில் மார்ச் 10, 12 மற்றும் 14ம் தேதிகளிலும், மறுமார்க்கமாக மன்னார்குடி – திருப்பதி (17408) இடையே மார்ச் 11, 13, 15 ஆகிய தேதிகளிலும் ரத்து செய்யப்படுகிறது.

புதுச்சேரி – திருப்பதி இடையே எக்ஸ்பிரஸ் (16112) ரயில் மார்ச் 12 மற்றும் 23ம் தேதிகளிலும், மறுமார்க்கமாக திருப்பதி – புதுச்சேரி (16111) இடையே மார்ச் 11 மற்றும் 24ம் தேதிகளிலும் ரத்து செய்யப்படுகிறது.

Edit by Prasanth.K

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

புதுச்சேரி சிறுமியை தேடுவதில் அலட்சியம் காட்டிய போலீஸார்! முதல் அமைச்சர் எடுத்த அதிரடி முடிவு!