Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பெங்களூர் குண்டுவெடிப்பு..! துப்பு கொடுத்தால் 10 லட்சம் சன்மானம்..! என்.ஐ.ஏ அறிவிப்பு

Banglore Blast

Senthil Velan

, புதன், 6 மார்ச் 2024 (16:35 IST)
பெங்களூரு குண்டு வெடிப்பு தொடர்பாக, குற்றவாளிகள் பற்றி துப்பு  கொடுத்தால் ரூ.10 லட்சம் ரூபாய் சன்மானம் வழங்கப்படும் என்று தேசிய புலனாய்வு அமைப்பு அறிவித்துள்ளது.
 
இதுகுறித்து தேசிய புலனாய்வு அமைப்பான என்.ஐ.ஏ., வெளியிட்ட அறிவிப்பில், வெடிகுண்டு தாக்குதல் நடத்தியதாக சந்தேகிக்கப்படும் நபரின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளதாகவும்,  இந்த நபரைக் கைது செய்வதற்கு முக்கிய தகவல்களை அளித்தால் ரூ.10 லட்சம் சன்மானம் வழங்குவதாகவும் அறிவித்துள்ளது.
 
சந்தேகிக்கப்படும் நபர் தொடர்பான முக்கியமான தகவல்களை வழங்கும் எந்தவொரு நபரின் அடையாளமும் கண்டிப்பாக ரகசியமாக வைக்கப்படும் என்றும் என்.ஐ.ஏ உறுதியளித்தது.

 
இதனால் தகவல் அறிந்தவர்கள் நம்பிக்கையுடன் முன்வந்து தகவல்களை வழங்கலாம் என்றும் அது இந்த வழக்கில் விரிவாக தீர்வு காண்பதை எளிதாக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளது. இது தொடர்பாக என்.ஐ.ஏ. அதிகாரிகளை 08029510900 அல்லது 8904241100 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் எனவும் அறிவுறுத்தி உள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சிறுமியின் உடல் பெற்றோரிடம் ஒப்படைப்பு..! குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுப்பதாக முதல்வர் உறுதி.!!