2015 ஆம் ஆண்டிற்காக மாநில திரைப்பட விருதுகளை தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
இதுகுறித்து அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில்,
தமிழ்நாடு அரசு திரைப்பட விருதுகள் வழங்கும் விழா மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் அவர்கள் நடிகர், நடிகையர் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களுக்கு விருதுகள் - பரிசுகள் வழங்கிச் சிறப்பிக்கிறார்கள்.
தமிழ்நாடு அரசின் சார்பில் திரைப்பட விருதுகள் மற்றும் தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர். திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவன மாணவர்களுக்கான விருதுகள் வழங்கும் விழா 6.3.2024 புதன்கிழமை மாலை 6.00 மணியளவில் சென்னை, ராஜா அண்ணாமலைபுரம், முத்தமிழ்ப் பேரவை, டி.என். ராஜரத்தினம் கலையரங்கில் சிறப்பாக நடைபெற உள்ளது.
மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் அவர்கள் விழாவிற்குத் தலைமையேற்று விருதாளர்களுக்குத் தங்கப்பதக்கம், சிறந்த திரைப்படங்களின் தயாரிப்பாளர்களுக்குச் காசோலை. நினைவுப் பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கி விழாப் பேருரையாற்றுவார்கள்.
மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள் மாண்புமிகு இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு ஆகியோர் சிறப்புரை ஆற்றுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
விழாவில் பரிசு பெறும் திரைப்பட விருதுகள் வழங்கும் 2015-ஆம் ஆண்டிற்குத் தேர்வு செய்யப்பட்ட சிறந்த திரைப்படங்கள், நடிகர் நடிகையர், தொழில்நுட்பக் கலைஞர்கள் விவரம் பின்வருமாறு:-
அதன்படி சிறந்த நடிகராக இருதிச் சுற்று படத்தில் நடித்த மாதவன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். சிறந்த நடிகையாக 36 வயதிலேயே படத்தில் நடித்த நடிகை ஜோதிகா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
சிறந்த நடிகர் நடிகராக சிறப்பு பரிசு பெறுபவர் கவுதம் கார்த்திக், வை ராஜா வை படத்திற்காக தேர்வு செய்யப்பட்டுள்ளார். சிறந்த நடிகை சிறப்பு பரிசு பெறுபவர் ரித்திகா சிங், இறுதிச் சுற்று படத்திற்காக தேர்வு செய்யப்பட்டுளார். அதேபோல் சிறந்த வில்லன் நடிகராக அரவிந்த் சாமி, தனி ஒருவன் படத்திற்காக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.