Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மின்சார ரயில் மோதி இளம்பெண் உயிரிழப்பு: சென்னை அருகே அதிர்ச்சி சம்பவம்..!

Advertiesment
Chennai electric train
, திங்கள், 31 ஜூலை 2023 (12:30 IST)
சென்னை அருகே மின்சார ரயில் மோதி ஒரு இளம் பெண் உயிர் இழந்ததாகவும் இன்னொரு இளம் பெண் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன 
 
சென்னை ஊரப்பாக்கம் ரயில் நிலையம் அருகே இரண்டு பெண்கள் ரயில்வே தண்டவாளத்தை கடந்து சென்ற போது மின்சார ரயில் எதிர்பாராத வகையில் இருவர் மீது திடீரென மோதியது. 
 
இதில் 22 வயது இளம்பெண் சம்பவ இடத்திலேயே பலியானதாகவும் மற்றொரு பெண் படுகாயம் அடைந்ததாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன. படுகாயம் அடைந்த இளம் பெண் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். 
 
ரயில் வருவதை கவனிக்காமல் தண்டவாளத்தை இரண்டு இளம் பெண்களும் கடக்க முயன்ற போது இந்த விபத்து நேர்ந்துள்ளதாக முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது
 
Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மகளிர் உரிமைத் தொகைகாக பட்டியலின சமுதாய நிதியை மடைமாற்றுவதா? அண்ணாமலை கண்டனம்..!