Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பட்டாசு குடோனில் பயங்கர வெடி விபத்து;4 பேர் பலி - டிடிவி.தினகரன் இரங்கல்

ttv dinakaran
, சனி, 29 ஜூலை 2023 (13:12 IST)
கிருஷ்ணகிரி மாவட்டம் பழைய பேட்டையில் உள்ளா பட்டாசு குடோனில் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர். 10 க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளாதாக தகவல் வெளியாகிறது.
 

இந்த விபத்து பற்றி அமமுக பொதுச்செயலாளர் தினகரன் தன் சமூகவலைதள பக்கத்தில்,
‘’கிருஷ்ணகிரி மாவட்டம் பழைய பேட்டையில் உள்ள பட்டாசு குடோனில் தொழிலாளர்கள் பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக நேரிட்ட விபத்தில் 8 பேர் உயிரிழந்த செய்தி வருத்தமளிக்கிறது.

உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்வதுடன், அவர்களின் ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கின்றேன்.

இந்த விபத்தில் காயமடைந்தோருக்கு உயர் மருத்துவ சிகிச்சைகள் கிடைப்பதையும், அவர்கள் மீண்டும் வாழ்வாதாரத்தை தொடங்க போதுமான நிவாரண உதவிகளையும் பெற்றிட அரசு வழிவகை செய்ய வேண்டும்.

மேலும், தீபாவளி பண்டிகை வரவிருப்பதால் பட்டாசு தயாரிப்பு பணிகள் அனைத்து தொழிற்சாலைகளிலும் மும்முரமாக நடைபெற்றுவரும் நிலையில், பணியாளர்களுக்கு போதிய பாதுகாப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதா என்பதையும், தொழிற்சாலைகள் முறையாக பராமரிக்கப்படுகின்றனவா என்பதையும் தமிழக அரசு உறுதிப்படுத்தி, இதுபோன்ற விபத்துகள் ஏற்படாதவாறு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகின்றேன்’’என்று தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

‘’தேசிய மாடல் ஒழியட்டும்’’ அண்ணாமலை நடைபயணத்தில் அர்ஜூன் சம்பத் கோஷம்! வைரல் வீடியோ