Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
Tuesday, 4 March 2025
webdunia

நடுக்கடலில் தீப்பிடித்த கப்பல்! 20 இந்தியர்களின் நிலை என்ன?

Advertiesment
Ship fire
, வெள்ளி, 28 ஜூலை 2023 (10:09 IST)
டச்சு கடல் பகுதியில் சென்ற சரக்கு கப்பல் தீப்பற்றியுள்ள நிலையில் அதில் பணியாற்றிய 20 இந்தியர்களின் நிலை என்ன என்பது குறித்த பதட்டம் எழுந்துள்ளது.



ஜெர்மனியில் இருந்து 3000 சொகுசு கார்களை ஏற்றிக் கொண்டு பிரம்மாண்ட சரக்கு கப்பல் ஒன்று எகிப்து நோக்கி சென்றுக் கொண்டிருந்துள்ளது. இந்த கப்பல் டச்சு கடல் பகுதியில் சென்றுக் கொண்டிருந்தபோது திடீரென தீப்பற்றியுள்ளது.

இந்த கப்பலில் சுமார் 20க்கும் மேல் இந்தியர்கள் பணியாற்றி வருவதாக தெரிய வந்துள்ளது. இந்த தீ விபத்தில் ஒரு இந்திய ஊழியர் உயிரிழந்துள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளது. கப்பலில் தீயை அணைக்கவும், ஊழியர்களை காப்பாற்றவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

கப்பலில் சிக்கிய மற்ற 20 இந்திய பணியாளர்களின் நிலை என்ன என்பது குறித்து தெரிய வரவில்லை. இதனால் பெரும் பதட்டம் எழுந்துள்ளது.

Edit by Prasanth.K

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஓபிஎஸ் உடன் இணைந்து மக்களவை தேர்தலில் போட்டி: டிடிவி தினகரன் அறிவிப்பு..!