சென்னை, ராயப்பேட்டை பீட்டர்ஸ் மேம்பாலத்தில் இளைஞர்கள் சிலர் ஈடுபட்ட அதிவேக பைக் ரேஸ் காரணமாக நிகழ்ந்த விபத்தில், இரு பெண் குழந்தைகளின் தந்தை ஒருவர் உயிரிழந்த சோக சம்பவம் நிகழ்ந்துள்ளது.
உயிரிழந்தவர் ஹெல்மெட் அணிந்து, சாலையின் ஓரங்களில் மெதுவாக வந்தபோதும், மேம்பாலத்தில் வைக்கப்பட்டிருந்த தடுப்புகளை மீறி பந்தயத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் மோதியதால் விபத்தில் சிக்கினார். விபத்துக்கு பிறகு இளைஞர்கள் அங்கிருந்து தப்பியோடினர்.
விபத்தை நேரில் கண்ட பொது மக்கள், "அநியாயம் செய்கிறார்கள் இந்த இளைஞர்கள்! உயிரிழந்த அவரது குடும்பத்தை இனி யார் காப்பாற்றுவது?" என ஆவேசத்துடன் கேள்வியெழுப்பினர். இதுபோன்ற சட்டவிரோத பைக் ரேஸ்களை நிரந்தரமாக தடுக்க காவல்துறை கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
சட்டத்தின் பிடியில் இருந்து இத்தகைய பந்தயதாரர்கள் தப்பக் கூடாது என்பதே அனைவரது கோரிக்கையாக உள்ளது.