Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நாளை முதல் 4 நாட்களுக்கு மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம்.. முழு விவரங்கள்..!

Advertiesment
Metro Train

Mahendran

, திங்கள், 13 ஜனவரி 2025 (17:07 IST)
சென்னை மெட்ரோ ரயில் சேவை ஜனவரி 14-ஆம் தேதி முதல் 17-ஆம் தேதி வரை மாற்றப்பட்டுள்ளதாக மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

ஜனவரி 14 முதல் 16-ஆம் தேதி வரை ஞாயிறு விடுமுறை நேர அட்டவணையின் படி மெட்ரோ ரயில் இயக்கப்படும் என்றும், ஜனவரி 17-ஆம் தேதி சனிக்கிழமை அட்டவணையின் படி மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மெட்ரோ நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

பொங்கல் விடுமுறையை முன்னிட்டு, ஜனவரி 14, 15 மற்றும் 16 ஆகிய தேதிகளில் ஞாயிறு விடுமுறை நேர அட்டவணை பிரகாரம் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும். ஜனவரி 17-ஆம் தேதி வெள்ளிக்கிழமை மட்டும் சனிக்கிழமை அட்டவணையின் படி மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும்.

அதன்படி, ஞாயிறு விடுமுறை அட்டவணை என்பது காலை 5 மணி முதல் இரவு 11 மணி வரை மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும். காலை 5 மணி முதல் மதியம் 12 மணி வரை மற்றும் இரவு 8 மணி முதல் 10 மணி வரை 10 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும்.

மதியம் 12 மணி முதல் இரவு 8 மணி வரை 7 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும். இரவு 10 மணி முதல் 11 மணி வரை 15 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.


Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மகா கும்பமேளா: உத்தரபிரதேச அரசுக்கு ரூ.2 லட்சம் கோடி வருவாய் கிடைக்கிறதா?